Home /News /madurai /

Madurai | புது பொலிவுடன் காட்சியளிக்கும் பெரியார் பேருந்து நிலையம்- என்னென்ன வசதிகள் உள்ளன?

Madurai | புது பொலிவுடன் காட்சியளிக்கும் பெரியார் பேருந்து நிலையம்- என்னென்ன வசதிகள் உள்ளன?

மதுரை பெரியார் பேருந்து நிலையம்

மதுரை பெரியார் பேருந்து நிலையம்

Madurai | மதுரையில் புதிதாக கட்டப்பட்ட பெரியார் பேருந்து நிலையம் பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

தூங்கா நகரத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான பெரியார் பேருந்து நிலையம் மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டு தற்போது மதுரை மக்களிடம் பெரிய வரவேற்பையும், பாராட்டையும் பெற்று வருகிறது.

பெரியார் பேருந்து நிலையம் மதுரையில் கட்டப்பட்ட முதல் பேருந்து நிலையம் ஆகும். மதுரை மாநகராட்சியில் மாநகரின் மத்தியப் பகுதியில் இந்த பேருந்து நிலையமானது அமைந்துள்ளது.

பிற்காலத்தில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாதவாறு, மாட்டுத்தாவணி பகுதியில் புதிதாக மதுரை மாநகராட்சி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்ட பின்பு பெரியார் பேருந்து நிலையம் நகரப் பேருந்து நிலையமாகச் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கும், புறநகர்ப் பகுதிகளுக்கும் நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மதுரை பெரியார் பேருந்து நிலையம்


இப்பேருந்து நிலையம் அருகில் மாநகராட்சி வணிக வளாகப் பகுதியினுள்ளிருக்கும் பேருந்து நிலையத்திலிருந்து திருப்புவனம், திருப்பரங்குன்றம், திருமங்கலம், சோழவந்தான், அழகர் கோவில் போன்ற ஊர்களின் வழியாகச் செல்லும் நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மதுரை பெரியார் பேருந்து நிலையம்


100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த பேருந்து நிலையம் தற்போது மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 157.70 கோடி ரூபாய் மதிப்பில் நவீன வசதிகள் மற்றும் 4 நடைமேடைகளுடன் கட்டப்பட்டுள்ளது. 2019 ம் ஆண்டு பழைய பேருந்து நிலையமானது இடிக்கப்பட்டு புதிய பேருந்து நிலையத்திற்க்கான கட்டிட பணிகள் துவங்கப்பட்டு கடந்த 5 மாதத்திற்கு முன்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்த புதிய பேருந்து நிலையத்தில் நவீன வசதிகள் மட்டுமல்லாது வணிக வளாகத்துடன் கூடிய பேருந்து நிலையமாகவும், ஒரே சமயத்தில் 4.870 இருசக்கர வாகனங்கள் மற்றும் 350 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தக்கூடிய வசதிகள் கொண்டுள்ளது. பேருந்து நிலையம் தற்போது முழுவதுமாக கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ள நிலையில் வணிக வளாகம் அதன் அருகாமையில் கட்டப்பட்டு வருகிறது. வெகு விரைவில் அப்பணிகளும் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Madurai

அடுத்த செய்தி