ஹோம் /நியூஸ் /மதுரை /

பைக்கில் சென்ற இளைஞரை வெட்டி சாய்த்த மர்ம கும்பல்.. மதுரையில் அதிர்ச்சி!

பைக்கில் சென்ற இளைஞரை வெட்டி சாய்த்த மர்ம கும்பல்.. மதுரையில் அதிர்ச்சி!

மாதிரி படம்

மாதிரி படம்

Madurai murder | வைகைக்கரை பாலம் அருகே இளைஞரை வெட்டி சாய்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai | Madurai

மதுரையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை சரமாரியாக வெட்டி கொலை செய்த மர்மகும்பலை போலீசார் திவீரமாக தேடி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் தத்தனேரி பகுதியில் உள்ள வைகைக்கரை பாலம் அருகே சரவணக்குமார் (29) என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் சரவணக்குமாரை வழிமறித்து  அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியுள்ளது.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் கிடந்த இளைஞரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மர்மகும்பலை திவீரமாக தேடி வருகின்றனர்.

First published:

Tags: Crime News, Local News, Madurai, Murder