மதுரையில் 4 மாதங்களுக்கு முன்பு மாயமான இளைஞர் கிணற்றில் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பட்டணம் பகுதியை சேர்ந்தவர் பெர் பெரியசாமி. இவரது மனைவி வள்ளி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருட்டு வழக்கு ஒன்றில் கைதாகி பெரியசாமி சிறைக்கு சென்றார். இந்நிலையில் மதுரை திருவாதவூர் முக்கம்பட்டியை சேர்ந்த அவருடைய நண்பர் தமிழரசன் என்பவர் பெரியசாமியை ஜாமீனில் எடுக்க வள்ளிக்கு முயன்றுள்ளார்.
இதுதொடர்பாக தமிழரசன் அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்ற நிலையில் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. பெரியசாமி சிறையில் இருந்த நிலையில் இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் பெரியசாமி சிறையில் இருந்து ஜாமீனில் வந்துள்ளார். நண்பர்கள் மூலம் தமிழரசன் - வள்ளியின் கள்ளக்காதல் விவகாரம் தெரியவந்துள்ளது. துரோகம் செய்த நண்பனை தீர்த்துக்கட்ட முடிவு செய்த பெரியசாமி தனது நண்பர்களுடன் சதி திட்டம் தீட்டியுள்ளார்.
இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் 19ம் தேதியன்று மதுரை அப்பன் திருப்பதி அருகே குருத்தூர் என்ற கிராமத்திற்கு மது குடிக்க தமிழரசனை பெரியசாமி அழைத்து சென்றுள்ளார். மேலும் தனது நண்பர்களான ஒத்தக்கடை கொக்குளம் பகுதியை சேர்ந்த அக்கினி, ஒத்தக்கடை பட்டணம் பகுதியை சேர்ந்த நவீன், அழகேஷ், குணாளன், அழகர் ஆகியோரை அழைத்து சென்றுள்ளார்.
மதுபோதையில் இருந்த தமிழரசனை பெரியசாமி மற்றும் அவரது நண்பர்கள் அடித்துக்கொலை செய்துள்ளனர். தமிழரசனின் உடலை ஏற்கனவே திருடி வைத்திருந்த இருசக்கர வாகனத்தில் கயிறு மற்றும் துணிகளால் சுற்றில் கிணற்றில் தூக்கி வீசியுள்ளனர்.
இதையும் படிங்க: ஆண்களை அதிகமாக தாக்கும் இதய நோய்... இதை கைவிட்டாலே பிரச்சனையை தவிர்க்கலாம்..!
இந்த சூழலில் பெரியசாமியின் நண்பனான நவீன் என்பவர் மதுபோதையில் தமிழரசன் கொலை செய்த விவகாரம் குறித்து நண்பர்களிடம் உளறியுள்ளார். இந்த தகவலை மோப்பம் பிடித்த மதுரை போலீஸார் உடனடியாக நவீனை பிடித்து தங்கள் பாணியில் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில் மதுபோதையில் இருந்த தமிழரசனை கொன்று உடலை கிணற்றில் வீசியதை ஓப்புக்கொண்டார்.
இதனையடுத்து குருத்தூர் பகுதிக்கு அழைத்து சென்று அவர் சொன்ன கிணற்றில் போலீஸார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது முற்றிலும் அழுகிய நிலையில் தமிழரசனின் உடல் கிடைத்தது. அதனை மீட்டு அங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர்.
தமிழரசனை கொலை செய்த வழக்கில் பெரியசாமியின் நண்பர்களான நவீன், அழகேஷ், குணாளன் ஆகிய மூன்று பேரை அண்ணாநகர் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவான அழகர் என்பவரை தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Madurai, Tamil News