ஹோம் /நியூஸ் /மதுரை /

அம்மான்னா சும்மா இல்லடா.. வாகனத்தில் பிடித்து சென்ற குட்டியின் பின்னால் ஓடிய தாய் குதிரை

அம்மான்னா சும்மா இல்லடா.. வாகனத்தில் பிடித்து சென்ற குட்டியின் பின்னால் ஓடிய தாய் குதிரை

மதுரை

மதுரை

Madurai News : மதுரையில் மாநகராட்சியினர் வாகனத்தில் பிடித்துச்சென்ற தனது குட்டியை பின்தொடர்ந்து ஒடிச்சென்ற தாய் குதிரையால் நெகிழ்ச்சி.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரையில் மாநகராட்சியினர் வாகனத்தில் பிடித்துச்சென்ற தனது குட்டியை பின்தொடர்ந்து ஒடிச்சென்ற தாய் குதிரையால் நெகிழ்ச்சி.

மதுரை மாநகர் பகுதியின் பல்வேறு  பகுதிகளில் சாலைகளில் மாடுகள், குதிரைகள் வலம் வருவதால் போக்குவரத்து இடையூறும் விபத்துக்களும் ஏற்படுகின்றன.

இதன் காரணமாக வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதியடைந்து உள்ளனர்.இதனால் மதுரை வைகை ஆற்றின் தென்கரை பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த குதிரைகளை மாநகராட்சி பணியாளர்கள் பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, குட்டி குதிரை ஒன்றை பிடித்து வாகனத்தில் ஏற்றிய போது, தாய் குதிரை தனது குட்டியை பிரிய மனமின்றி மாநகராட்சி வாகனத்தை மறைத்து நின்றதோடு, வாகனத்தில் ஏற மறுத்து வாகனத்தின் பின்னாலேயே ஓடி சென்ற சம்பவம் காண்போரை நெகிழ செய்தது.

First published:

Tags: Horse race, Local News, Madurai, Tamil News