ஹோம் /நியூஸ் /மதுரை /

திமுகவில் மீண்டும் அழகிரி? - மதுரையில் சர்ச்சையை கிளப்பும் போஸ்டர்கள்

திமுகவில் மீண்டும் அழகிரி? - மதுரையில் சர்ச்சையை கிளப்பும் போஸ்டர்கள்

மு.க.அழகிரி போஸ்டர்

மு.க.அழகிரி போஸ்டர்

Madurai Poster : மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரியின் படங்களை இணைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

திமுகவில் மீண்டும் மு.க.அழகிரி இணைந்து செயல்படுவதை வலியுறுத்தும் வகையிலான போஸ்டர்கள் மதுரை நகர் முழுவதும் ஒட்டப்பட்டு வருகின்றன.

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் அரசியல் சார்ந்த செயல்பாடுகளில் இருந்து முற்றிலும் ஒதுங்கியே இருந்தார். திமுக ஆட்சி அமைந்து மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், மு.க.அழகிரி மீண்டும் திமுகவில் இணைய வேண்டும் என்பதை குறிப்பிடும் வகையிலான போஸ்டர்கள் ஆங்காங்கே, அவ்வப்போது ஒட்டப்பட்டன.

இந்த சூழலில், கடந்த ஜன.16 அன்று மதுரை வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மு.க.அழகிரியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அதனை தொடர்ந்து, ஜன.30 அன்று வரவுள்ள அழகிரியின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் திமுகவில் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலான போஸ்டர்களை அவரது ஆதரவாளர்கள் மதுரை நகர் பகுதிகளில் அதிகமாக ஒட்டி வருகின்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - மு.க.அழகிரியின் படங்களை இணைத்தும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் - தயாநிதி அழகிரி ஆகியோரின் படங்களை இணைத்தும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன."பழையன கழிதலும் புதியன புகுதலும், கலைஞரின் பொன்னர் சங்கர், நாடாளுமன்றத்தை 40ம் கைப்பற்ற வேண்டும்" போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ள அந்த போஸ்டர்கள் மீண்டும் மதுரை அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளன.

First published:

Tags: DMK, Local News, Madurai, MK Alagiri, MK Stalin, Tamil News, Udhayanidhi Stalin