ஹோம் /நியூஸ் /மதுரை /

மதுரை சிறு குறு தொழில் சங்கத்தின் ’கல்யாண கண்காட்சி’- கண்டுகளிக்கும் மக்கள்

மதுரை சிறு குறு தொழில் சங்கத்தின் ’கல்யாண கண்காட்சி’- கண்டுகளிக்கும் மக்கள்

மதுரை கண்காட்சி

மதுரை கண்காட்சி

மதுரையில் சிறு குறு தொழில் சங்கத்தினர் ஏற்பாடு செய்துள்ள கல்யாண கண்காட்சி மூன்று தினங்கள் நடைபெறவுள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரையில் முதல் முறையாக சிறு குறு தொழில் சங்கத்தின் சார்பில் மடிட்சியா அரங்கில் 'கல்யாண கண்காட்சி' நடைபெறுகின்றது. 50க்கும் மேற்பட்டஅரங்குகள் இக்கல்யாண கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது. .

கல்யாண கண்காட்சி என்றால் என்ன?

அதாவது தற்பொழுது வைரலாகி வரும் ப்ரீ வெட்டிங் சூட், வெட்டிங் ஷூட், போஸ்ட் வெட்டிங் ஷூட் என இணையத்தில் கலக்கி வரும் வெட்டிங் போட்டோகிராபி முதற்கொண்டு வெட்டிங் சூட்டிற்கு தேவையான துணிகள், ஆபரணங்கள், அழகு சாதன பொருட்கள், மண்டபத்திற்கு தேவையான அலங்காரப் பொருட்கள் வரை திருமண நிகழ்விற்கு தேவையான அனைத்தையும் ஒரே இடத்தில் காட்சிப்படுத்துவது தான் கல்யாண கண்காட்சி.

கண்காட்சியில் மக்கள் 

இதுகுறித்து பேசிய சிறு குறு தொழில் சங்கத்தினர், ‘சுபநிகழ்ச்சிக்கு தேவையான அனைத்தையும் ஒரே இடத்தில் பூர்த்தி செய்வதன் நோக்கம்தான் இக்கல்யாண கண்காட்சி. மேலும் இக்கண்காட்சியில் பெண் தொழில் முனைவோருக்கான ஆரி எம்பிராய்டிங், மணப்பெண் அலங்காரம், பேப்ரிக் பெயிண்டிங் போன்றவை செமினார் முறையில் நடைபெறுகின்றது. குறிப்பாக நட்பா உறவா என்ற பட்டிமன்றம் முதற்கொண்டு வரன் பார்க்கும் நிகழ்வுகளும் நடைபெறும்.

கண்காட்சியில் கடைகள்

கண்காட்சியை காண்பதற்கு என கல்லூரி மாணவர்கள், பெண் தொழில் முனைவோர், வெட்டிங் போட்டோகிராபியில் ஆர்வம் உள்ளவர்கள், பொதுமக்கள் என 300-க்கும் மேற்பட்டோர் இக்கண்காட்சியை பார்வையிட்டனர். கல்யாணம் கண்காட்சி மூன்று நாட்களான இன்று முதல் திங்கட்கிழமை வரை நடைபெறும் என்பதை குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்: யுவதிகா, மதுரை.

First published:

Tags: Local News, Madurai