முகப்பு /செய்தி /மதுரை / மதுரை ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை... 31 கி.மீக்கு மெட்ரோ ரயில்... வந்தது புது அப்டேட்..!

மதுரை ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை... 31 கி.மீக்கு மெட்ரோ ரயில்... வந்தது புது அப்டேட்..!

மெட்ரோ ரயில்

மெட்ரோ ரயில்

Madurai Metro Rail | மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

சென்னையை தொடர்ந்து கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, மதுரையில் ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை 31 கிலோ மீட்டர் தூரம் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறு ஆய்வு அறிக்கை தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், மதுரையில் மெட்ரோ ரயில் சேவையை அறிமுகப்படுத்துவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கியது. மூன்று கோடி ரூபாய் செலவில் விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது.

120 நாட்களில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும் என டெண்டரில் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக வரும் 3-ம் தேதிக்குள் ஒப்பந்த ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அடுத்த மாதம் தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் இந்தத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Madurai, Metro Rail