முகப்பு /செய்தி /மதுரை / மதுரை மெட்ரோ: 75 நாட்களில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்!

மதுரை மெட்ரோ: 75 நாட்களில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்!

மெட்ரோ (கோப்பு படம்)

மெட்ரோ (கோப்பு படம்)

விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்குமாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தை அரசு கேட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை 75 நாட்களில் தயாரிக்கப்படும் என்று சென்னை மெட்ரோ இரயில் திட்ட இயக்குநர் அர்ச்சுனன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் வெற்றிகரமாக செயல்படுவதை தொடர்ந்து மதுரை மாநகரிலும் இத்திட்டம் செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

திருமங்கலத்தில் இருந்து ஒத்தக்கடை வரை இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதனைதொடர்ந்து, விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்குமாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தை அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

அதன்பேரில், இறுதி செய்யப்பட்ட ஆலோசனை நிறுவனம் மூலம் திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது. ரயில் நிலையம், செலவுகள், செயல்படுத்தப்படும் முறைகள், பொருளாதார விவரங்கள் ஆகியவை விரிவான திட்ட அறிக்கையில் இடம்பெற்றிருக்கும்.

First published:

Tags: Madurai, Metro Rail, Metro rail route