Home /News /madurai /

மதுரை மீனாட்சியம்மன் கோவில் நிலம் நீண்ட போராட்டத்திற்கு பின் மீட்பு...

மதுரை மீனாட்சியம்மன் கோவில் நிலம் நீண்ட போராட்டத்திற்கு பின் மீட்பு...

மீட்கப்பட்ட கோயில் நிலம்

மீட்கப்பட்ட கோயில் நிலம்

Madurai | மதுரை அருகே 55 ஆண்டுகளுக்கு முன் ஆக்கிரமிக்கப்பட்ட மீனாட்சியம்மன் கோவில்  நிலம் நீண்ட போராட்டத்திற்கு பின் மீட்பு

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் மூலவர்களான அம்மன் மற்றும் சுவாமிக்கு அர்த்தஜாம பூஜையின் போது ருத்ர ஜெப ஊழியம் செய்ய வேண்டும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தயிர் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் கடந்த 55 ஆண்டுகளுக்கு முன்பு தக்ஷிணாமூர்த்தி அய்யர் மற்றும் முக்கோனார் ஆகியோருக்கு மதுரை மாவட்டம் சக்குடி அருகே 2 ஏக்கர் பரப்பளவில் நன்செய் நிலமானது  கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது.

    ஆனால் தக்ஷிணாமூர்த்தி அய்யர் மற்றும்  முக்கோனார் ஆகிய இருவரும் ஊழியம் செய்வதை தொடராமலும், அவர்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை வேறொரு நபருக்கு விற்றதை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கோவிலின் பெயரிலேயே பட்டா மாற்றம் செய்து தர வேண்டும் என கோவில் நிர்வாகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம் என உறுதி செய்யப்பட்ட நிலையில் மீனாக்ஷி அம்மன் கோவிலின் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டு துணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் தலைமையில் கோவில் நிர்வாகத்திடம் நிலம்  ஒப்படைக்கப்பட்டது.

    Also see... மாணவிகளிடம் தவறாக நடந்த உதவி பேராசிரியர் இடமாற்றம்

    மேலும் மீட்கப்பட்ட இடத்தில் கோவில் நிர்வாகம் சார்பில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடம் என்றும் பலகையும் வைக்கப்பட்டது.

    செய்தியாளர்: ஹரிகிருஷ்ணன், மதுரை
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Hindu Temple, Land Documents, Madurai

    அடுத்த செய்தி