ஹோம் /நியூஸ் /மதுரை /

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மார்கழி மாத திருவிழா... வரும் 28ம் தேதி தொடக்கம்..

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மார்கழி மாத திருவிழா... வரும் 28ம் தேதி தொடக்கம்..

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

Madurai District News : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மார்கழி மாத திருவிழா 28ம் தேதி தொடங்குகிறது.

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai, India

சித்திரை மாதத்தில் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலின் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மார்கழி மாத எண்ணெய் காப்பு உற்சவ திருவிழா வரும் 28ம் தேதி முதல் ஜனவரி 5ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில், மார்கழி மாத எண்ணைக்காப்பு உற்சவம் வரும் 28ம் தேதி முதல் அடுத்த மாதம் 5ம் தேதி வரை நடக்கிறது. இந்த திருவிழா நாட்களில் தினசரி மாலை 6 மணிக்கு மீனாட்சி அம்மன் புதுமண்டபத்தில் எழுந்தருளி அங்கு தைலக்காப்பு தீபாராதணைகள் நடக்கும்.

பூஜை முடிந்த பின்னர் மீனாட்சி அம்மன் புதுமண்டபத்தில் இருந்து புறப்பாடாகி 4 சித்திரை வீதிகளில் சுற்றி வந்து கோயிலை வந்தடையும். ஜனவரி 4ம் தேதி கோ-ரதத்திலும், 5ம் தேதி கனகதண்டியலிலும் மீனாட்சி அம்மன் எழுந்தருளி நான்கு சித்திரை வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

இதையும் படிங்க : மதுரை உலக தமிழ் சங்கத்தில் கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நிறைவு..

6ம் தேதி திருவாதிரை தினத்தன்று பொன்னூஞ்சல் மண்டபத்தில் சுந்தரேஸ்வரர் ரிஷப வாகனத்திலும், அம்மன் மரசிம்மாசனத்திலும் எழுந்தருளி ஆடி வீதிகளை வலம் வருவா். திருவெண்பா உற்சவம் 28ம் தேதி முதல் ஜனவரி 6ம் தேதி வரை நடக்கிறது.

இதையொட்டி மாணிக்கவாசகர் 100 கால்மண்டபத்தில் நடராஜர் சன்னதி முன்பாக உள்ள சவுக்கையில் எழுந்தளுவர். அங்கு தேவார கோஷ்டியினரால் திருவெண்பா பாடி தீபாராதனை முடிந்த பின்னர் நான்கு ஆடி வீதிகளை வலம் வருவர். ஜனவரி 6ம் தேதி திருவாதிரை தினத்தன்று இரவு திருஞானசம்பந்தர் சன்னதியில் திருவெண்பா பாடி முடிந்தவுடன் சுவாமியும், அம்மனும் ஆடி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள்.

மேலும் ஆருத்ரா தரிசனம் அடுத்த மாதம் 5ம் தேதி நள்ளிரவு முதல் 6ம் தேதி வரை அதிகாலையில் பிரதான அபிஷேகம் நடைபெறும். பஞ்ச சபை கொண்ட இத்திருக்கோயிலில் நடராஜர், சிவகாமி அம்மன், மணிவாசகர், சுவாமிகள் ஆகியோர் சுவாமி கோயில் ஆறுகால் பீடத்தில் எழுந்தருளியும், சிவகாமி அம்மன் 100 கால் மண்டபத்தில் எழுந்தருளி ஏக காலத்தில் இரு இடங்களிலும் அபிஷேகமும் ஆராதனையும் நடைபெறும்.

கால பூஜைகள் முடிந்து காலை 7:00 மணி அளவில் உற்சவம் நடராஜர் சிவகாமி அம்மனுடன் நான்கு மாசி வீதிகளில் வளம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் அபிஷேகப் பொருட்கள் ஆன பால், தயிர், இளநீர், நெய், மஞ்சள் பொடி, எண்ணை மற்றும் இதர அபிஷேகப் பொருட்களை வரும் 5ம் தேதி மாலை 7:00 மணிக்குள் திருக்கோவிலில் உள்துறை அலுவலகத்தில் வழங்கலாம்.

செய்தியாளர் : யுவதிகா - மதுரை

First published:

Tags: Local News, Madurai