Home /News /madurai /

வெள்ளி கிளி வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் மதுரை மீனாட்சியம்மன்..

வெள்ளி கிளி வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் மதுரை மீனாட்சியம்மன்..

மதுரை - வெள்ளி கிளி வாகனத்தில் மீனாட்சி அம்மன்

மதுரை - வெள்ளி கிளி வாகனத்தில் மீனாட்சி அம்மன்

Madurai | மதுரை மீனாட்சியம்மன் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் எழுந்தருளும் வெள்ளி கிளி வாகனத்தில் ஆடி முளைக்கொட்டு திருவிழாவிலாவின் 6ம் நாளான இன்று பக்தர்கள் தரிசனம் அளித்தார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறும். இதில் ஆடி முளைக்கொட்டு விழா, நவராத்திரி உற்சவம், ஐப்பசி பூரம், மார்கழி திருவிழா போன்றவை மீனாட்சி அம்மனுக்கு தனியாக நடத்தப்படும் திருவிழாக்களாகும்.

ஆடி முளைக்கொட்டு திருவிழா கொடியேற்றத்துடன் விமர்சையாக தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது.
திருவிழாவின் 6ம் நாளான இன்று மீனாட்சி அம்மன் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வெள்ளி கிளி வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பார் என்பது விசேஷமான ஒன்று.

Also see... புதுச்சேரியில் ஆன்லைன் ரம்மி விளையாட பணம் திருடிய காவலர்

இன்று மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டதை தொடர்ந்து அம்மன் ஆடி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்று வெள்ளிக்கிளி வாகனத்தில் எழுந்தருளி அம்மனை தரிசித்து மகிழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Hindu Temple, Madurai

அடுத்த செய்தி