Home /News /madurai /

Madurai | மீனாட்சி அம்மன் கோவில் நிலத்தில் புதிய திருமண மண்டபம் - ரூ.2.34 கோடி மதிப்பீட்டில் கட்டிடபணிகள் துவக்கம்

Madurai | மீனாட்சி அம்மன் கோவில் நிலத்தில் புதிய திருமண மண்டபம் - ரூ.2.34 கோடி மதிப்பீட்டில் கட்டிடபணிகள் துவக்கம்

மீனாட்சி கோயில்

மீனாட்சி கோயில்

Madurai news | மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிலத்தில் திருமண மண்டபம் கட்டும் பணித் தொடங்கியுள்ளது.

    மதுரை செல்லூர் பகுதியில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் சுமார் 2.34 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திருமண மண்டபம் கட்டுவதற்கான கட்டிடபணிகள் இன்று முதல் தொடங்கின.

    மதுரை செல்லூரில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலம் பல்வேறு நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்ததையடுத்து அந்த நிலம் இந்து சமய அறநிலையத் துறை மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக மீட்கப்பட்டது. இதையடுத்து செல்லூரில் உள்ள அந்த 1 ஏக்கர் நிலத்தை எழை மக்கள் பயன்படுத்தும் வகையில் திருமண மண்டபம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் புதிய திருமண மண்டபம் கட்டும் பணிகளை காணொளி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.

    தங்கும் விடுதி


    இதைதொடர்ந்து திருமண மண்டபம் கட்டுவதற்கான கட்டிட பணிகள் தொடங்கின. இது தொடர்பாக கட்டிடபணி மேற்பார்வையாளர் கூறியபொழுது செல்லூர் பகுதியில் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் 5,500 சதுர அடியில் நவீன வசதிகளுடன் கூடிய திருமண மண்டபம் அமைய உள்ளது. அதில் திருமண கூடம், உணவு அருந்தும் இடம் என வசதிகளுடன் கூடிய மண்டபம் 2.34 கோடி ரூபாய் செலவில் கட்டப்படுகிறது.

    இந்த பணிகளை 18 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சார்பில் கட்டப்படும் முதல் திருமண மண்டபம் இது தான். மேலும் மதுரை எல்லிஸ் நகர் பிரதான சாலையில் உள்ள காலி இடத்திலும் மற்றொரு திருமண மண்டபம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இது தவிர எல்லிஸ் நகரில் பக்தர்கள் தங்கும் விடுதி அருகே புதிதாக மேலும் ஒரு பக்தர்கள் தங்கும் விடுதி 35 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட உள்ளது. அதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகவும் விரைவில் அப்பணிகள் தொடங்கும் என்றும் கூறினார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Madurai

    அடுத்த செய்தி