கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு நேற்று ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.2000-க்கு விற்பனை செய்யப்பட்டது.
மதுரை மல்லி என்றாலே தனி மவுசு உள்ளது. உலக அளவில் மதுரை மல்லிகைப்பூவுக்கு அதிகளவு வரவேற்பு உள்ளது.
மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் மலர் சந்தை உள்ளது. தேனி, விருதுநகர் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் விளையும் மல்லியே மதுரை மல்லி. மதுரை மல்லி மட்டுமல்லாது திண்டுக்கல், கொடைக்கானல், பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து வரக்கூடிய பூக்களும் இங்கு மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
சாதாரணமான நாட்களில் மதுரை மல்லி 200க்கும் ரூபாய் 300-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக சுபமுகூர்த்தம் மற்றும் திருக்கார்த்திகை போன்ற நிகழ்ச்சிகளால் மதுரை மல்லியின் விலை மல மலவென்று உயர்ந்து ரூ. 3000க்கு விற்பனை செய்யப்பட்டது.
நேற்று திருக்கார்த்திகை என்பதால் மல்லிப்பூ கிலோ ரூ.2,000 விற்பனை செய்யப்படுகின்றது. 600 - 800 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த பிச்சி பூ ரூ. 1,500க்கும், ரூ. 800க்கு விற்பனையாகி வந்த முல்லை பூ ரூ. 1500க்கும், சம்பங்கி ரூ. 150க்கும், பட்டன் ரோஸ் ரூ. 250 க்கும், செவ்வந்தி ரூ. 150க்கும் விற்பனையாகி வருகின்றது.
செய்தியாளர்: யுவாதிகா, மதுரை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jasmine, Local News, Madurai, Price hike