Home /News /madurai /

Madurai | இரவில் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் மதுரை மாரியம்மன் கோயில் தெப்பக்குளம்

Madurai | இரவில் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் மதுரை மாரியம்மன் கோயில் தெப்பக்குளம்

மதுரை மாரியம்மன் கோயில் தெப்பக்குளம்

மதுரை மாரியம்மன் கோயில் தெப்பக்குளம்

Madurai | மதுரை மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் இரவில் வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது.

மதுரை மாவட்டத்தின் ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாகவும், உள்ளூர் மக்களின் பொழுதுபோக்கு தலமாகவும் விளங்குகிறது இந்த மதுரை மாரியம்மன் கோயில் தெப்பக்குளம்.

வடிவமைப்பு:

வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் என்று அழைக்கபடும் இந்த குளமானது 305 மீட்டர் நீள-அகலம் கொண்டது. குளத்தின் நான்கு புறத்திலும் பன்னிரெண்டு நீளமான படிகட்டுகளும் சுமார் 15 அடி நீளத்திற்கு கல்லினால் ஆன சுற்று சுவர்களும் கட்டப்பட்டுள்ளன.

தெப்பக்குளத்தின் நடுவில் மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு நீராழி மண்டபம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இம்மண்டபத்தில் தோட்டத்துடன் கூடிய கோயில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சுரங்க குழாய்கள் மூலமாக வைகை நதி நீர் தெப்பக்குளத்திற்குள் வரும்படி இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுவே தமிழ்நாட்டில் உள்ள பெரிய தெப்பக்குளமாகும்.

வரலாறு:

மதுரையை ஆண்ட மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் தெப்பக்குளமானது கட்டப்பட்டது. திருமலை நாயக்கர் அரண்மனை காட்டுவதற்கான மணல் இந்த பகுதியில் இருந்து எடுக்கப்பட்டபின் பள்ளமாக இருந்த இப்பகுதியை சீரமைக்க எண்ணிய மன்னன் அப்பகுதியை சதுர வடிவில் வெட்டி, 1645ல் தெப்பக்குளமாக மாற்றி அதன் நடுவே மண்டபம் ஒன்றையும் கட்டினார்.

மதுரை மாரியம்மன் கோயில் தெப்பக்குளம்


தற்பொழுதும் மதுரையில் உள்ள முக்கியமான சுற்றுலா தலங்களில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அடுத்த படியாக சுற்றுலா பயணிகளால் அதிகமாக ஈர்க்கபடும் இடமாக இந்த தெப்பக்குளம் விளங்குகிறது. தினமும் மாலை நேரங்களில் ஊர் மக்கள், வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து அவர்களது நேரத்தை செலவிடுகின்றனர்.

வார நாட்களில் மாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இங்கு குவிகின்றனர். வார இறுதி நாட்களில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வந்து செல்கின்றனர். தெப்பக்குளத்தின் நான்கு புறங்களிலும் 100க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. அதுபோக குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன.

மதுரையின் முக்கிய சுற்றுலாத்தலமாக இது உள்ள நிலையில் மேலும் மேலும் முன்பை விட தற்போது சுற்றுலா பயணிகள் அதிகம் வரதொடங்கி உள்ளதால் ஏற்கனவே செய்து கொடுக்கப்பட்ட பார்கிங் வசதிகள் போதுமானதாக இல்லை என்றும் மேலும் போக்குவரத்து வசதிகளையும், பார்கிங் வசதிகளையும் தெப்பக்குளத்தை சுற்றி விரிவுபடுத்த வேண்டும் என்பதே அங்கு வருபவர்களின் கோரிக்கையாக உள்ளது.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Madurai

அடுத்த செய்தி