Home /News /madurai /

மதுரையில் மல்லிகைப் பூ கிலோ ரூ.300க்கு விற்பனை.. மழை, முகூர்த்த தினங்களால் கிடுகிடுவென உயர்ந்த பூக்களின் விலை

மதுரையில் மல்லிகைப் பூ கிலோ ரூ.300க்கு விற்பனை.. மழை, முகூர்த்த தினங்களால் கிடுகிடுவென உயர்ந்த பூக்களின் விலை

 பூக்களின் விலை கடும் உயர்வு

பூக்களின் விலை கடும் உயர்வு

Madurai | நாளை முகூர்த்த தினம் என்பதால் விலை இன்னும் அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India
தென் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாகவும், தொடர் முகூர்த்த தினங்கள் காரணமாகவும் மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்கள் விலை ஒரு வாரமாக கடும் உச்சத்தில் நீடித்து வருகிறது.

இயல்பாக 300 முதல் 600 ரூபாய் வரை விற்பனையாகும் மல்லிகைப்பூ விநாயகர் சதுர்த்தியை (ஆக.30) முன்னிட்டு  1600 முதல் 1800 ரூபாய் வரை விலை உயர்ந்து விற்பனையானது.

அதனை தொடர்ந்து மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பூக்கள் வரத்து குறைந்து, ஒரு வாரமாக விலை உயர்வு நீடித்து வருகிறது.

நாளை முதல் அடுத்தடுத்த தொடர்ந்து மூன்று நாட்கள் முகூர்த்த தினங்களாக இருப்பது இந்த விலை உயர்வுக்கு மற்றுமொரு காரணம் என கூறும் வியாபாரிகள், வரும் நாட்களில் மேலும் விலை உயர வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இன்று கடும் உச்சமாக மல்லிகை பூ கிலோ 3000 ரூபாய்க்கும், 50 ரூபாய்க்கு விற்பனையாகும் சம்மங்கி  250 ரூபாய்க்கும், 300 ரூபாய்க்கு விற்பனையாகும் பிச்சி, முல்லை பூக்கள் 1000 ரூபாய்க்கும்,  50 ரூபாய்க்கு விற்கப்படும் பட்டன் ரோஸ் 250 ரூபாய்க்கும், 30 ரூபாய்க்கு விற்கப்படும் அரளி 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Also see... மதுரையில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள்

































பூஇயல்பான விலைஇன்றைய விலை (கிலோவுக்கு)
மல்லிரூ.300 - 600ரூ.3000
சம்மங்கிரூ.50ரூ.250
பிச்சி, முல்லைரூ.300ரூ.1000
ப.ரோஸ்ரூ. 50ரூ.250
அரளிரூ. 30ரூ. 250

 
Published by:Vaijayanthi S
First published:

Tags: Hiked price, Jasmine, Madurai

அடுத்த செய்தி