ஹோம் /நியூஸ் /மதுரை /

மதுரை மாட்டுத்தாவணியில் புதிய டைடல் பார்க்.. அதிகாரிகள் ஆய்வு..!

மதுரை மாட்டுத்தாவணியில் புதிய டைடல் பார்க்.. அதிகாரிகள் ஆய்வு..!

மாதிரி படம்

மாதிரி படம்

Madurai tidel park | டைடல் பார்க் எப்போது வரும் என காத்து கொண்டிருந்த மக்களுக்கு சந்தோஷமான செய்தியாக அமைந்துள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai | Madurai

மதுரையில் புதிதாக அமையவுள்ள டைடல் பார்க்கிற்கான சாத்தியங்கள் குறித்து தொழில்துறை கூடுதல் முதன்மை செயலாளர் கிருஷ்ணன் இன்று முதல்கட்ட ஆய்வு நடத்தினார்.

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் இரண்டு கட்டமாக 10 ஏக்கர் பரப்பளவில் டைடல் நிறுவனம் மற்றும் மாநகராட்சி இணைந்து புதிய டைடல் பார்க் அமைக்கும் என கடந்த செப்டம்பர் 16ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதற்கு முதல் கட்டமாக 600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும், இதன் மூலம் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

மதுரை மாட்டுத்தாவணி அருகே டைடல் பார்க் அமைக்கப்பதற்கான இடத்தின் சாத்தியங்களையும், அதன் கட்டமைப்பு வசதிகள், போக்குவரத்து சூழல் உள்ளிட்டவை குறித்து தொழில்துறை மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தகத்துறை கூடுதல் முதன்மை செயலாளர் கிருஷ்ணன், கூடுதல் செயலாளர் மரியம் பல்லவி பல்தேவ், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழக நிர்வாக இயக்குநர் ஜெயஶ்ரீ முரளிதரன் ஆகியோர் இன்று நேரில் ஆய்வு செய்தனர்.

ஆய்வின் போது மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜித் சிங் கலோன் ஆகியோர் உடனிருந்தனர். இந்த டைடல் பார்க் எப்போது வரும் என மதுரை மக்கள் ஆவலுடன் காத்து கொண்டிருக்கும் நிலையில், இந்த முதற்கட்ட ஆய்வு செய்தி மதுரை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: வெற்றி, மதுரை.

First published:

Tags: Inspection, Local News, Madurai