Home /News /madurai /

Madurai | குப்பை கிடங்காக காட்சி அளிக்கும் வில்லாபுரம் - ஜீவா நகரை இணைக்கும் முக்கிய சாலை

Madurai | குப்பை கிடங்காக காட்சி அளிக்கும் வில்லாபுரம் - ஜீவா நகரை இணைக்கும் முக்கிய சாலை

குப்பையாக இருக்கும் சாலை

குப்பையாக இருக்கும் சாலை

Madurai News | மதுரை மாவட்டம் ஜீவா நகர் பகுதியையும் வில்லாபுரம் பகுதியையும் இணைக்கும் முக்கிய சாலை பத்து ஆண்டுகளுக்கும் மேலாக குப்பை கிடங்காகவே காட்சியளிக்கிறது.

மதுரை தெற்கு பகுதியில் உள்ளடங்கிய ஜீவா நகர் மற்றும் வில்லாபுரம் ஆகிய இரண்டு பகுதிகளை இணைப்பதற்காக ராமையா தெருவை அடுத்து அமைக்கப்பட்ட சாலை இரும்பு பட்டறை கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி வைக்கும் கிடங்காக காணப்படுகிறது.

ஜீவா நகர் பகுதியையும் வில்லபுரத்தையும் இணைப்பதற்காக முக்கிய சாலை உள்ள நிலையிலும் ஜீவா நகர் உட்பகுதியில் வசிக்கும் மக்கள் வில்லாபுரத்திற்கும் அதையடுத்துள்ள அவனியாபுரத்திற்கும் செல்வதற்கு இந்த குப்பை சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர். இந்த குப்பை சாலையை சுற்றி 20ககும் மேற்பட்ட குடும்பங்களும் வசிக்கின்றன.

அருகாமையில் வசிப்பவர்களிடம் இது குறித்து கேள்வி எழுப்பிய பொழுது 10-12 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சாலையில் பல இரும்பு மற்றும் புற பிளாஸ்டிக் ஆலைகள் தங்கள் கழிவுகளை இங்கு கொட்டி வருவதாகவும், சாலை அருகாமையில் சாக்கடை கால்வாய் செல்வதால் அதில் குப்பைகள் கொட்டி பழகிய அவர்கள் பின்பு அங்கிருந்த சாலையிலேயே கழிவுகளை கொட்ட தொடங்கியதாகவும் கூறினர்.

இதன் மீது இத்தனை ஆண்டுகளாக என் நடவடிக்கை எடுக்கப்டவில்லை என்ற கேள்விக்கு, ‘இந்த சாலை மற்றும் அதனை சுற்றி அருகாமையில் உள்ள பகுதிகள் அவனியாபுரம் தொகுதிக்கும், மதுரை மேற்கு தொகுதிக்கும் இடையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சாலை எந்த தொகுதி வசம் வரும் என்பது யாருக்கும் தெரியாத நிலை உள்ளது என்றும் கவனிப்பு இல்லாமல் இந்த சாலை சென்றதற்கு இதுவே முக்கிய காரணம் என்றும் தெரிவித்தனர்.

பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவது மட்டுமல்லாமல், கொட்டுபவர்கள் அதனை அங்கேயே வைத்து எரித்து விடுவதும் உண்டு. இது சுற்றி வசிக்கும் மக்களுக்கு பெரிதும் உடல்நல கேடு விளைவிக்கும் செயலாகும்.

மழைக்காலத்தில் இந்த சாலை மேலும் சேதமடைந்து துர்நாற்றம் வீசுவதற்கு முன்பாகவே மாநகராட்சி நிர்வாகம் இதில் தலையிட்டு கழிவுகளை அங்கிருந்து அப்பூறப்படுத்தி, சாலையை போக்குவரத்துக்கு ஏற்றாற்போல் சீர்செய்து, மேலும் கழிவுகள் கொட்டப்படுவதை தடுத்து நடவடிக்கை எடுப்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Madurai

அடுத்த செய்தி