ஹோம் /நியூஸ் /மதுரை /

வளர்பிறை முகூர்த்தம்.. பூக்கள் விலை கிடுகிடு உயர்வு.. மதுரையில் மல்லி கிலோ ரூ.2000க்கு விற்பனை..

வளர்பிறை முகூர்த்தம்.. பூக்கள் விலை கிடுகிடு உயர்வு.. மதுரையில் மல்லி கிலோ ரூ.2000க்கு விற்பனை..

 பூக்களின் விலை கடும் உயர்வு

பூக்களின் விலை கடும் உயர்வு

விசேஷ நாட்களில் பூக்களின் விலை கடுமையாக உயர்வது வழக்கம். ஆனா‌ல் தற்போது கார்த்திகை மாதம் என்பதாலும், முகூர்த்த நாட்கள் அடுத்தடுத்து வருவதாலும் பூக்களின் தேவை அதிகமாக உள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

மழை மற்றும் பனி காரணமாக பூக்கள் வரத்து குறைந்து மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகை பூ கிலோ 2000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் விளைச்சல் குறைந்துள்ளன. இதனால் மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தைக்கு வழக்கமாக வரும் 4 டன் பூக்களுக்கு பதிலாக தற்போது சுமார் 1 டன் பூக்கள் மட்டுமே வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

பூக்களின் விளைச்சல் குறைவு ஒரு புறம் இருக்க நாளை மறுநாள் இந்த ஆண்டின் கடைசி வளர்பிறை முகூர்த்த நாள் என்பதாலும் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

Also see...திருக்கார்த்திகை தீபத் திருவிழா 2022.. காவல் உதவி மையம் திறப்பு..!

வழக்கமாக கிலோ 300 - 600 ரூபாய்க்கு விற்பனையாகும் மல்லிகை இன்று 2000 - 2200 ரூபாய்க்கும், 300 ரூபாய்க்கு விற்பனையாகும். பிச்சி, முல்லை, கனகாம்பரம் பூக்கள் 600 - 800 ரூபாய்க்கும், 50 ரூபாய்க்கு விற்பனையாகும் சம்மங்கி பூ 150 ரூபாய்க்கும், 30 ரூபாய்க்கு விற்பனையாகும் அரளி 200 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.

பூ - இயல்பான விலைஇன்றைய விலை (கிலோவுக்கு)
மல்லி - ரூ.300 - 600ரூ.2000 - 2200
சம்மங்கி - ரூ 50ரூ.150
பிச்சி -ரூ. 300ரூ.600 - 800
முல்லை - ரூ.300ரூ.600 - 800
ப.ரோஸ் - ரூ.50ரூ.200
அரளி -ரூ. 30ரூ.200
கனகாம்பரம் - ரூ.300ரூ.1500

கார்த்திகை பண்டிகை வரை இந்த விலை உயர்வு நீடிக்க வாய்ப்பிருப்பதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Flower Carpet, Local News, Madurai