ஹோம் /நியூஸ் /மதுரை /

மல்லிகை ரூ 1200.. முல்லை ரூ.900 - பண்டிகை காலத்தில் கிடுகிடுவென பூ விலை உயர்வு

மல்லிகை ரூ 1200.. முல்லை ரூ.900 - பண்டிகை காலத்தில் கிடுகிடுவென பூ விலை உயர்வு

 பூக்களின் விலை கடும் உயர்வு

பூக்களின் விலை கடும் உயர்வு

மதுரை மல்லிகை பூ பிரசித்தி பெற்றது. இங்கிருந்து பல்வேறு மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் மல்லிகைப்பூ அனுப்பப்பட்டு வருகின்றன.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Madurai, India

  நாளை சரஸ்வதி பூஜை,  ஆயுதபூஜை மற்றும் நாளை மறு நாள் விஜயதசமி ஆகிய விஷேச நாட்களை முன்னிட்டு,  மதுரை மாட்டுதாவணி பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை உயர்ந்து உள்ளது. அதே போல் மற்ற பூக்களின் விலையும் உயர்ந்து உள்ளது. மதுரை மாட்டுதாவணி மலர் சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

  ஆனால்,  காலநிலை சீராக இருப்பதால், மல்லிகை பூ வரத்து அதிகமாக உள்ளதால்,  தற்போது கிலோ மல்லிகை ரூ.1000 முதல் ரூ.1200 க்கு விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மதுரை மாவட்டத்தில்,  ஆவியூர்,  வளையங்குளம், உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிராமங்களில்,  மல்லிகை விவசாயம் பிரதானமாக நடக்கிறது.

  Also see...ஆசிட் கலந்த குளிர்பானத்தை குடித்த மாணவனின் 2 கிட்னி செயலிழப்பு 

  பூக்களின் விலை நிலவரம்

  1) மல்லிகை கிலோ  ரூ 1200 .

  2) முல்லை பூ கிலோ  900 ரூபாய்

  3) பிச்சி பூ கிலோ - 800 ரூபாய்

  4) அரளி பூ கிலோ - 500 ரூபாய்

  5) சம்பங்கி கிலோ-  300 ரூபாய்

  6)பட்டன் ரோஸ் -300  ரூபாய்

  செய்தியாளர்: கருணாகரன் (மதுரை)

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Jasmine, Madurai