ஹோம் /நியூஸ் /மதுரை /

"போட்டிக்கு ரெடியா" மதுரை ஜல்லிக்கட்டு.. தொடங்கியது முன்பதிவு!

"போட்டிக்கு ரெடியா" மதுரை ஜல்லிக்கட்டு.. தொடங்கியது முன்பதிவு!

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

Madurai jallikattu | மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையோட்டி ஜனவரி 15ல் அவனியாபுரத்திலும், 16ல் பாலமேட்டிலும், 17ல் அலங்காநல்லூரிலும் ஜல்லிகட்டு போட்டிகள் நடைபெறுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai | Madurai | Alanganallur

மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியது.

மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 15ல் அவனியாபுரத்திலும், 16ல் பாலமேட்டிலும், 17ல் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு முன் பதிவை இன்று பகல் 12 மணி முதல் 12ம் தேதி மாலை 5 மணி வரை madura.nic.in என்ற இணைய தளத்தில் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மதுரையில் இன்று 12 மணி முதல் முன் பதிவு மேற்கொள்ளும் பணிகள் ஆர்வமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் முன் பதிவு செய்வதற்கு எதெல்லாம் கட்டாயம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதில், காளைகள், மாடுபிடி வீரர்களுக்கான புகைப்படம் மற்றும் ஆவணங்களுடன் முன்பதிவு செய்ய வேண்டும். ஜல்லிகட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதோடு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை அவசியமாகும்.

ஜல்லிகட்டில் பங்கேற்கும் காளைகள் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய 3 ஜல்லிகட்டில் எதாவது ஒரு ஜல்லிகட்டில் மட்டுமே பங்கேற்க முடியும். ஜல்லிகட்டு காளையை அழைத்து வரும் காளை உரிமையாளர் மற்றும் உதவியாளர் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதோடு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை அவசியம் செய்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Alanganallur, Avaniyapuram, Jallikattu, Madurai, Palamedu