ஹோம் /நியூஸ் /மதுரை /

தீபாவளி பலகாரங்கள் செய்து கலக்கும் சிறைக்கைதிகள்... களைகட்டும் மதுரை ஜெயில் பஜார்..

தீபாவளி பலகாரங்கள் செய்து கலக்கும் சிறைக்கைதிகள்... களைகட்டும் மதுரை ஜெயில் பஜார்..

மதுரை

மதுரை

மதுரை ஜெயில் பஜாரில் சிறைக்கைதிகள் தயாரித்து விற்பனைக்கு வந்துள்ள தீபாவளி பலகாரங்கள் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

சிறைகைதிகளை நல்ல ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுப்படுத்துவது அவர்களுக்கென்று சிறைக்குள்ளேயே வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவது போன்ற செயல்களில் சிறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை மத்திய சிறையில் உள்ள 'ஜெயில் பஜார்' விற்பனை அங்காடியில், இனிப்பு, கார வகைகள், நெய்யால் தயார் செய்யப்பட்ட இனிப்பு பதார்த்தங்கள் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

அந்த பொருட்களுக்கு வாடிக்கையாளர்களிடம் மிகுந்த வரவேற்பு உள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனையில் ஈடுபட வேண்டி மத்திய சிறையில் உள்ள சமையல் கலையில் நிபுணத்துவம் மிகுந்த கைதிகளின் பட்டியலை தயார்செய்துள்ளனர்

பிறகு சமையல் அறையில் தீபாவளி பதார்த்தங்களை தயார் செய்வது, அடுப்பில் சுட்டு எடுப்பது, பார்சல் செய்வது, ஜெயில் பஜாரில் விற்பனை செய்வது என்று தலா 25 கைதிகள் நான்கு குழுக்களாக பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

லட்டு, மைசூர் பாக்கு, அல்வா உள்ளிட்ட பல இனிப்பு பொருட்களை அவர்கள் தயார் செய்கின்றனர்.

முறுக்கு பொன்ற கார வகை பலகாரங்களும் செய்கின்றனர்.  இந்த தின்பண்டங்களின்  விற்பனை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Deepavali, Diwali, Madurai