மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 974 கோடி ரூபாயில் மதுரை மேம்படுத்தப்படும் என்று கூறப்பட்டது. அதன் பெயரில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலைச் சுற்றி உள்ள பகுதிகள், பெரியார் பேருந்து நிலையம், வைகை ஆற்றினை மேம்படுத்துதல் போன்றவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் அமல்படுத்தப்பட்டன.
இந்நிலையில் மதுரை மாநகரில் வாகன நெருக்கத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மாநகராட்சியும் மாநில நெடுஞ்சாலை துறையும் இணைந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் செல்லூர் பாலம் முதல் விரகனூர் பைபாஸ் வரை வைகை ஆற்றின் இரு கரைகளிலும் 380 கோடி ரூபாயில் பிரம்மாண்டமான நெடுஞ்சாலை அமைக்க முடிவுசெய்யப்பட்டது.
இந்நிலையில் தெப்பக்குளம் பாலம் அருகே உள்ள இந்திராநகர் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள செல்லூர் பாலத்தை இணைக்கும் நெடுஞ்சாலை தனியார் ஆக்கிரமிப்பால் முழுமையாக நிறைவடையாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதாவது தார் சாலைகள் முதற்கொண்டு பிளாட்பார்ம் வரை கட்டப்பட்டு பாதியிலேயே நிற்கின்றது.
இதனால் குடிகாரர்களின் இடமாகவும் ஆடு மாடுகளை மேய்க்கும் இடமாகவும் மாறி போய்விட்டது. மேலும் குப்பைகளை கொட்டவும், வண்டிகளை பார்க்கிங் செய்யவும்' இளைஞர்கள் போட்டோ சூட் எடுக்கும் இடமாக தற்பொழுது இருக்கின்றது.
ஸ்மார்ட் சிட்டி திட்டம் 80 சதவீதம் நிறைவடைந்ததாக கூறப்படுகின்ற நிலையில் கிடப்பில் போடப்பட்டுள்ள நெடுஞ்சாலை ஒருங்கிணைக்கும் திட்டத்தையும் சரி செய்ய வேண்டும் என்று மதுரை மக்கள் கோரிக்கையாக உள்ளது.
செய்தியாளர்: யுவதிகா, மதுரை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Madurai