ஹோம் /நியூஸ் /மதுரை /

ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த இளைஞரை பீர் பாட்டிலால் குத்திக்கொன்ற கொடூரம்.. மதுரையில் அதிர்ச்சி!

ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த இளைஞரை பீர் பாட்டிலால் குத்திக்கொன்ற கொடூரம்.. மதுரையில் அதிர்ச்சி!

மதுரை

மதுரை

Madurai murder | சாலையில் தூங்கி கொண்டிருந்த யாசகரை மதுபோதையில் இருவரும் ஓரின சேர்க்கைக்கு அழைத்துள்ளனர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Melur | Madurai

மதுரை மேலூரில் ஓரினச்சேர்க்கைக்கு ஒத்துழைக்க மறுத்த யாசகரை மது போதையில் பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே வண்ணாம்பாறைபட்டி பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே உடலில் காயங்களுடன் 28 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இறந்த வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இறந்தவர் திருநெல்வேலியை சேர்ந்த ராஜ்குமார் என்பதும் இவர் இப்பகுதியில் யாசகம் எடுத்து வந்ததும் தெரியவந்துள்ளது. நேற்றிரவு அதே ஊரைச் சேர்ந்த பசுபதி மற்றும் பெருமாள் ஆகியோர் மதுபோதையில், யாசகர் ராஜ்குமாரை அழைத்துச் சென்று ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்த முயன்றுள்ளனர்.

ALSO READ | மதுரையில் யூபிஎஸ்சி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

இதற்கு மறுப்பு தெரிவித்து ராஜ்குமார் தகராறில் ஈடுபட்டதால் ஆத்திரத்தில், கையில் இருந்த பீர் பாட்டிலால் இருவரும் ராஜ்குமாரின் கழுத்து பகுதியில் குத்தி கொலை செய்து விட்டு அவரது உடலை அருகில் இருந்த தண்ணீர் தொட்டியில் வீசிவிட்டு சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர்: வெற்றி, மதுரை.

First published:

Tags: Crime News, Homosex, Local News, Madurai, Murder