ஹோம் /நியூஸ் /மதுரை /

மதுரை ஆதீனம் மடத்தின் சொத்து: அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு

மதுரை ஆதீனம் மடத்தின் சொத்து: அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு

மதுரை ஆதினம்

மதுரை ஆதினம்

ராதாகிருஷ்ணன் என்பவர் மதுரை ஆதின மடத்திற்கு சொந்தமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் சொத்துகளை மீட்டு, பாதுகாக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரை ஆதின மடத்திற்கு சொந்தமாக தமிழகம் முழுவதும் உள்ள சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க, இந்து சமய அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சேலம் கண்ணன்குறிச்சியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மதுரை ஆதின மடத்திற்கு சொந்தமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் சொத்துகளை மீட்டு, பாதுகாக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த மனு, நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

ஏற்கனவே இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த காரணத்தால் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். அதில், மதுரை ஆதின மடத்திற்கு சொந்தமான சொத்துகளில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களை கண்டறிந்து இந்து சமய அறநிலையத்துறை சட்டபடி உரிய விதிமுறைகளை பின்பற்றி ஆதின மடத்தின் சொத்துகளை மீட்க அறநிலையத்துறை ஆணையருக்கு உத்தரவிட்டனர். மதுரை ஆதின மடத்திற்கு வர வேண்டிய நிலுவை வாடகை மற்றும் குத்தகை பாக்கிகளையும் சட்டபடி வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

First published:

Tags: HRNC, Madurai Adhinam, Madurai High Court