மதுரையை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் தனது பாஸ்போர்டை புதுப்பித்து வழங்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் நான் எனது பாஸ்போர்ட்டை புதுப்பித்து வழங்க கோரி, பயண முகவர் (agent) மதுரையை சேர்ந்த நசிருதீன் என்பவரிடம் கடந்த 2019 ஆம் ஆண்டு கொடுத்து இருந்தேன். ஆனால் போலி பாஸ்போர்ட் வழங்கிய வழக்கில் கியூ பிரிவு போலீசார், பயண முகவர் (agent) மதுரையை சேர்ந்த நசிருதீன் அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.அப்போது நான் எனது பாஸ்போர்ட்டையும், நசுருதின் அலுவலகத்தில் இருந்து போலீசார் எடுத்து சென்று விட்டனர். நசுருதீனும் இந்த வழக்கில்
குற்றம் சாட்டப்பட்டுள்ளார். எனவே, எனது பாஸ்போர்டை புதுப்பித்து வழங்க உத்தரவிட வேண்டும் என கூறி இருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, மனுதாரரின் பாஸ்போர்ட்டை உரிய முறைபடி புதுப்பிக்க வழங்க உத்தரவிட்டார். போலி ஆவணங்களை தாக்கல் செய்து இலங்கையை சேர்ந்தவர்கள் மற்றும் பலர் இந்திய பாஸ்போர்ட் பெற்ற வழக்கை கீழமை நீதிமன்றம் தாமதமின்றி விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
மேலும், போலி ஆவணங்களை தாக்கல் செய்து இலங்கையை சேர்ந்தவர்கள் மற்றும் பலர் இந்திய பாஸ்போர்ட் பெற்ற வழக்கை கீழமை நீதிமன்றம் தாமதமின்றி விசாரித்து முடிக்க வேண்டும்..
போலி ஆவணங்களை தாக்கல் செய்து இலங்கையை சேர்ந்தவர்கள் இந்திய பாஸ்போர்ட் பெற்ற விவகாரம் சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு.
போலி ஆவணங்களை தாக்கல் செய்து இலங்கையை சேர்ந்தவர்கள் இந்திய பாஸ்போர்ட் பெற்ற வழக்கில், கடந்த 2021 ஆம் ஆண்டில் பொது நல வழக்கு தொடங்கப்படுவதற்கு முன் இந்த வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்திருந்தால் தற்போது சர்ச்சையாகி இருக்காது. மேலும், இந்த வழக்கில், உயர்நீதிமன்றம் வகுத்த காலக்கெடு கடைபிடிக்கப்பட்டிருந்தால், வழக்கு தொடர்பாக அனுமதி வழங்கும் அதிகாரிகள் தாமதமின்றி அனுமதி அளித்திருந்தால், போலி பாஸ்போர்ட் வழக்கு குறித்து தற்போதைய சர்ச்சையே எழுந்திருக்காது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
போலி ஆவணங்களை தாக்கல் செய்து இலங்கையை சேர்ந்தவர்கள் இந்திய பாஸ்போர்ட் பெற்ற வழக்கில் அப்போதைய மதுரை மாநகர் காவல் ஆணையராக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் பொறுப்பாக மாட்டார். காரணம் மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புதிய பாஸ்போர்ட் சான்றிதழ் சரி பார்ப்பு அதிகாரம் நோடல் அதிகாரியான மாநகர் காவல் ACP நிலை அதிகாரிக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
புதிய பாஸ்போர்ட் வழங்க சரிபார்ப்பு பணியில், எஸ்.பி.க்கள் மற்றும் மாநகர காவல் ஆணையர்கள் பொதுவாக மாதாந்திர குற்ற மதிப்பாய்வு கூட்டங்களில் பெறப்பட்ட மொத்த பாஸ்போர்ட் சரிபார்ப்பு கோரிக்கைகள், பூர்த்தி செய்யப்பட்ட சரிபார்ப்புகள் மற்றும் நிலுவையில் உள்ள சரிபார்ப்புகள் ஆகியவற்றை மட்டுமே மதிப்பாய்வு செய்கின்றனர் என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.
Must Read : தாலிச் செயினை பறிக்க முடியாததால் ஆசிரியையை பைக்குடன் எட்டி உதைத்த திருடர்கள் - திருவாரூரில் அதிர்ச்சி சம்பவம்
போலி ஆவணங்களை தாக்கல் செய்து இலங்கையை சேர்ந்தவர்கள் இந்திய பாஸ்போர்ட் பெற்ற வழக்கை, பொது வெளியில் கவனத்திற்கு கொண்டு வந்த, மாநில பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை பாராட்டுகிறேன். அவர், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையில் ஜனநாயகத்தின் பாதுகாவலராக செயல்பட்டுள்ளார் என தெரிவுத்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.