முகப்பு /செய்தி /மதுரை / நாகர்கோவில் காசியின் ஜாமின் மனு தள்ளுபடி - மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு

நாகர்கோவில் காசியின் ஜாமின் மனு தள்ளுபடி - மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு

காசி

காசி

இவருக்கு ஜாமின் வழங்கினால் சாட்சியங்களை கலைத்து விடுவார் என குமரி மாவட்ட சிபிசிஐடி போலிசார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

பெண்களிடம் பழகி அவர்களின் ஆபாச புகைபடங்களை காட்டி சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்வேன் என மிரட்டி பணம் பறித்த வழக்கில் நாகர்கோவில் காசியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம் மதுரை கிளை.

பெண் மருத்துவர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பெண்களிடம் பழகி, அவர்களின் ஆபாச புகைபடங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்வேன் என கூறி மிரட்டிபணம் பறித்தவர் நாகர்கோவில் காசி. இவர் மீது கடந்த 202ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்க கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன் கடந்த சில வாரங்களுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரிக்கும் குமரி CBCID போலீசார் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், 120 பெண்கள், 400 உல்லாச வீடியோக்கள், 1900 ஆபாச புகை படங்கள் கைப்பற்ற பட்டு உள்ளது. பெண்கள் மற்றும் சிறுமிகளிடம் பழகி அவர்களை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி, அவர்களின் ஆபாச படங்களை எடுத்து பெண்களுக்கு எதிரான கடுமையான குற்றங்களை புரிந்து உள்ளார். எனவே ஜாமின் வழங்க கூடாது. அவ்வாறு வழங்கினால் சாட்சியங்களை கலைத்து விடுவார் என கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையும் படிக்க : இதனால தான் குக் வித் கோமாளியிலிருந்து மணிமேகலை விலகினாரா..?

இதை தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணை தீர்ப்புக்காக ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று இந்த வழக்கிற்கான தீர்ப்பு வழங்கப்பட்டது.  அதில், பெண்கள் மற்றும் சிறுமிகளிடம் பழகி அவர்களை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி, அவர்களின் ஆபாச படங்களை எடுத்து பெண்களுக்கு எதிரான கடுமையான குற்றங்களை புரிந்து உள்ளார். எனவே, இந்த நிலையில் காசிக்கு ஜாமின் வழங்கினால் விசாரணை பாதிக்கும் என தெரிவித்த நீதிபதி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

First published:

Tags: Madurai, Madurai High Court, Sexual harassment