தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அழகாபுரி பகுதியை சேர்ந்தவர் பாண்டித்துரை. இவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், பொது தேர்தலின் போது தேர்தல் பணியில் உள்ள அரசு பணியாளர்கள் தபால் ஓட்டுகள், சிறப்பு தபால் ஓட்டுகளை செலுத்துவதை சட்டவிரோதம் என்று அறிவித்து, தேர்தல் பணியில் உள்ள அரசு ஊழியர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்கு பதிவு செய்ய உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
நான் ஒரு ஆசிரியராக உள்ளேன். தகுதியான வாக்காளர் ஒருவர் கூட, வாக்களிக்காமல் இருக்கக் கூடாது. 100 சதவீத வாக்குபதிவு வேண்டும் என்ற நோக்கில் இந்திய தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. அதேபோன்று ஓட்டுகள் செல்லாத ஓட்டுக்கள் ஆகாமல் இருக்கவும், முறைகேடு நடைபெறாமல் இருக்கவும். பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
பொதுத் தேர்தலின் போது ஆசிரியர்கள், வருவாய்த்துறையினர், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் வெவ்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள், வாக்கு சாவடியில் பணியில் உள்ளனர். அவர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்கும் முறை (தபால் ஓட்டு) அமல்படுத்தப்படுகிறது. அவ்வாறு தேர்தல் பணியில் உள்ள அரசு ஊழியர்கள் தபால் வாக்கு அளிப்பதற்கு பல்வேறு கடினமான நடைமுறைகள் உள்ளன. எவ்வாறு என்றால், பாரம் 12 விண்ணப்பிக்க வேண்டும். அது தேர்தல் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் உள்ளன.
கடந்த 2011 தமிழக, சட்டசபை தேர்தலின்போது, தேர்தல் பணியில் இருந்ந அரசு ஊழியர்கள் 3 ,07,174 பேர். இதில் 1,29,413 அரசு பணியாளர்கள் மட்டுமே வாக்களித்தனர். இதில் 23,319 தபால் ஓட்டுகள் பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டன. செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதனால், 1,06,094 ஓட்டுக்கள் மட்டுமே செல்லுபடியானது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஆனால் மின்னணு வாக்குப் பதிவில் (EVM) செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்தால் இது போன்ற தவறுகள் ஏற்படாது . 99.99 சதவீதம் ஓட்டுக்கள் மின்னணு வாக்குபதிவு பதிவாகிவிடும். துல்லியமாகவும் இருக்கும். எனவே தேர்தல் பணியில் உள்ள அரசு ஊழியர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு தபால் ஓட்டு முறையில் தங்களது வாக்குகளை செலுத்தும் முறையை ரத்து செய்து விட்டு, மின்னணு வாக்கு பதிவு முறையில் வாக்கு பதிவு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வருகிற தேர்தலில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் வருவாய் துறையினர் உள்ளிட்டோருக்கு தபால் ஓட்டுக்களை தவிர்த்து மின்னனு வாக்கு பதிவு செய்ய உத்தரவிட. வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் ஆனந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இது பொது நல வழக்காக கருதமுடியாது. உயர்நீதிமன்றம் இது போன்ற விசயங்களில் தலையிட இயலாது என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Election Commission, EVM Machine, Madurai, Madurai High Court