Home /News /madurai /

திருமணத்திற்கு பின் கிரிக்கெட் விளைாயட அனுமதிக்க வேண்டும்... மணப்பெண்ணிடம் அக்ரிமெண்ட் போட்ட நண்பர்கள்

திருமணத்திற்கு பின் கிரிக்கெட் விளைாயட அனுமதிக்க வேண்டும்... மணப்பெண்ணிடம் அக்ரிமெண்ட் போட்ட நண்பர்கள்

மாப்பிள்ளையின் நண்பர்கள் போட்ட அக்ரிமெண்ட்

மாப்பிள்ளையின் நண்பர்கள் போட்ட அக்ரிமெண்ட்

திருமணத்தின் போது மாப்பிள்ளையின் நண்பர்கள் போட்ட அக்ரிமெண்ட் திருமண மேடையில் நகைப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India
    உசிலம்பட்டியில் திருமணத்திற்கு பின்னும் கிரிக்கெட் விளையாட அனுமதி அளிக்க வேண்டும் என மணமகனின் நண்பர்கள் மணமகளிடம் ஒப்பந்த பத்திரம் போட்டு திருமணம் செய்து வைத்த சுவாரஸ்ய சம்பவம் நடைபெற்றுள்ளது.

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட கீழப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிபிரசாத்., தேனியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக உள்ள இவர் கிரிக்கெட் விளையாட்டிலும்  ஆர்வம் உள்ளவராக இருந்துள்ளார்.

    இவர்களது கிரிக்கெட் அணியான சூப்பர் ஸ்டார் கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ள ஹரிபிரசாத்துக்கும், தேனியைச் சேர்ந்த பூஜா என்பவருக்கும் நேற்று உசிலம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.



    இந்த திருமணத்தின் போது பத்திரத்துடன் வந்த மணமகனின் நண்பர்கள் மணப்பெண்ணிடம் திருமணத்திற்கு பின்னரும் கணவரை கிரிக்கெட் விளையாட அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மணமகன் கிரிக்கெட் விளையாட மணமகள் சம்மதம் தெரிவிப்பது போன்று பத்தரத்தில் கையெழுத்திட வைத்து திருமண விழாவை அதிர வைத்தனர்.

    கையெழுத்திட்ட மணமக்கள்


    திருமணத்திற்கு பின்னர் மணமகன் விளையாட்டுகளில் கலந்து கொள்ள மனைவிமார்கள் ஒரு சில சமயம் தடுக்கும் சூழலில் மணமகனின் நண்பர்களின் இந்த சம்மத ஒப்பந்த பத்திரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    செய்தியாளர் : சிவக்குமார், திருமங்கலம்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Madurai

    அடுத்த செய்தி