Home /News /madurai /

மதுரையில் பசுமை நடை: பாரம்பரிய வரலாறு தெரிந்துகொள்ள உற்சாகத்துடன் திரண்ட மக்கள்!

மதுரையில் பசுமை நடை: பாரம்பரிய வரலாறு தெரிந்துகொள்ள உற்சாகத்துடன் திரண்ட மக்கள்!

மதுரையில் பசுமை நடை

மதுரையில் பசுமை நடை

மீண்டும் துவங்கியது பசுமை நடை - சமணர் மலையில் வரலாற்று சிறப்பை தெரிந்துக்கொள்ள பொதுமக்கள் உற்சாகத்துடன் கலந்துக்கொண்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
மதுரையின் வரலாற்றுத் தலங்கள் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கும் அளிக்கும் நோக்கில் நிகழ்த்தப்படும் பசுமை நடை இயக்கம் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் உற்சாகத்துடன் கீழ்க்குயில்குடி சமணர் மலையில் துவங்கியது. அதில் ஏராளமான மக்களைக் கலந்துகொண்டனர்.

மதுரையின் வரலாற்றுத் தலங்கள் நோக்கி மக்களை ஈர்க்கும் பசுமை நடை இயக்கம் 2010ல் இருந்து 12 ஆண்டுகளுக்கும் மேலாக வரலாறு, தொல்லியல், சூழலியல் சார்ந்து இயங்கி வருகிறது. இதில் மலைகள், குடைவரைகள், நீர் நிலைகள், ஆற்றோர மண்டபங்கள், அகழாய்வு தலங்கள், கற் திட்டைகள் உள்ளிட்ட தொல் தலங்களுக்கு லட்சக்கணக்கான மக்களை அழைத்துச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்துவர்.

மாதம் தோறும் ஒரு ஞாயிற்றுக் கிழமையன்று நடைபெறும் நடையின் போதும் தொல்லியல் அறிஞர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று அந்த இடங்களின் வரலாற்றுச் சிறப்புகள் குறித்து எடுத்துரைப்பர்.

உற்சாகத்துடன் திரண்ட மக்கள்


கொரோனா பெருந்தொற்று பாதிப்பின் காரணமாக இரண்டு ஆண்டுகளாக நிகழாமல் இருந்த பசுமை நடை தற்போது மீண்டும் கீழ்க்குயில்குடி சமணர் மலையில் துவங்கியது. இந்த வருடம் பசுமை நடை நிகழ்ச்சியை எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் ஒருங்கிணைத்து நடத்தினர்.

உற்சாகத்துடன் திரண்ட மக்கள்


சமணர் மலையின் நடுப்பகுதியில் அமைந்துள்ள பேச்சிப்பள்ளம் எனும் இடத்தில் நடந்த நிகழ்ச்சியில் சமணர் மலையின் சிறப்புகள் குறித்த அறிமுகமும், சித்திரை வீதிக்காரன் எழுதிய திருவிழாக்களின் தலைநகரம் நூலின் இரண்டாம் பதிப்பும் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பங்கேற்ற மக்களுக்கு கீழடி குறித்த புத்தகம் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது.

Also Read : மதுரையில் பிரபல ஹோட்டலில் தீவிபத்து... நள்ளிரவில் பரபரப்பு

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்கள், பசுமை நடை வழியாக மதுரையின் வரலாற்றோடு சேர்த்து புதிய உதயத்தையும், புது காற்றையும், புதிய மனிதர்களையும் தெரிந்துகொள்வது மகிழ்ச்சியளித்ததாகத் தெரிவித்தனர்.
Published by:Janvi
First published:

Tags: History tour, Madurai

அடுத்த செய்தி