Home /News /madurai /

Madurai | கடந்த ஆண்டு 19-வது இடம்: இந்த ஆண்டு 3-வது இடம்- 11-ம் வகுப்பு தேர்ச்சியில் முன்னேற்றம் கண்ட மதுரை

Madurai | கடந்த ஆண்டு 19-வது இடம்: இந்த ஆண்டு 3-வது இடம்- 11-ம் வகுப்பு தேர்ச்சியில் முன்னேற்றம் கண்ட மதுரை

காட்சிப் படம்

காட்சிப் படம்

Madurai news | மதுரையில் பிளஸ் 1 தேர்வில் 95.25 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி தரத்தில் மதுரை தமிழ்நாட்டில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் 35,907 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 34,201 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 98.02 சதவீதமும், மாணவர்கள் 92.43 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதம் 95.25 ஆகும். அதிகபட்சமாக 600 க்கு 594 ஒரு நபரும், 593 இரண்டு நபர்களும், 592 நான்கு நபர்களும் பெற்றுள்ளனர்.

பள்ளிகள் வாரியாக அரசு பள்ளி மாணவர்கள் 91.06 சதவீதம், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 94.64 சதவீதம், மாநகராட்சி மாணவர்கள் 91.01 சதவீதம், மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 98.44 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். 148 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. கடந்த ஆண்டு 11ம் வகுப்பு மாநில அளவு தேர்ச்சியில் 19வது இடத்தில் இருந்த மதுரை மாவட்டம் தற்போது 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

தேர்வு எழுதிய 35,907 மாணவர்களுள் வெவ்வேறு பாடங்களில் 1,230 மாணவர்கள் 100/100 மதிப்பெண்கள் வாங்கியுள்ளனர். இதில் அதிகமாக பொருளியலில் 391 பேரும், ஆடிட்டிங் 165 பேரும், கணக்கு பதிவியல் 113 பேரும், கம்பியுடிங் அப்ளிகேஷன் 79 பேரும், கணிதம் 49 உட்பட 1,230 பேர் 100 மதிப்பெண்கள் வாங்கியுள்ளனர்.

மதுரை மத்திய சிறையில் ஒரு பெண் உட்பட 17 பேர் 11ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளனர். இதில் ஒருவரை தவிர மீதமுள்ள 16 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகபட்சமாக அருண் என்பவர் 538 மதிப்பெண் பெற்றுள்ளார். 2-வது இடத்தில் சிவபாலா 508 மதிபெண்ணும், 3-வது இடத்தில் ராஜேஷ் கண்ணன் 502 மதிப்பெண் பெற்றனர்.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Madurai

அடுத்த செய்தி