Home /News /madurai /

வர்ம முறையில் சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவர் கைது! செருப்பு கடை நடத்தியவர் மருத்துவரா?

வர்ம முறையில் சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவர் கைது! செருப்பு கடை நடத்தியவர் மருத்துவரா?

போலி மருத்துவர் கைது

போலி மருத்துவர் கைது

நோயாளிகளுக்கு ஆட்டுத் தலை, இரும்புத் தூள், கோழி எலும்புகள் போன்றவற்றிலிருந்து மருந்துகளைத் தயாரித்து கொடுத்து வந்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu | Madurai
    மதுரை கோரிப்பாளையம் பகுதியில் கேரள வர்ம முறையில் போலியாக சிகிச்சை அளித்து மக்களை ஏமாற்றி வந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை கோரிப்பாளையம் பள்ளிவாசல் தெருவில் அம்பா வர்ம வைத்திய சாலை என்ற பெயரில் கிளினிக் நடத்தி வந்தார் சையது சுல்தான் மொஹைதீன் (33) என்பவர். இவர் பி.காம் படித்து விட்டு செருப்புக் கடை நடத்தி வந்தார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் செருப்பு கடை நஷ்டம் ஏற்பட்டதால், கேரளா சென்று வர்ம வைத்தியம் குறித்து ஒரு வருட பயிற்சி பெற்று அதே பகுதியில் அம்பா வர்ம வைத்யசாலை என்ற பெயரில் கிளினிக் ஆரம்பித்துள்ளார்.

    இந்த கிளினிக்கில் அப்பகுதிவாசிகள் பலரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அதில் பெரும்பாலனோருக்கு தீவிர பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளன. இவர்களுக்கு சையத் சுல்தான் ஆட்டுத் தலை, இரும்புத் தூள், கோழி எலும்புகள் போன்றவற்றிலிருந்து மருந்துகளைத் தயாரித்து கொடுத்து வருவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. மேலும், நோயாளிகளை மற்ற மருத்துவர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டாம் என அறிவுறுத்தியதாகவும், நீரிழிவு, ரத்த அழுத்தம், சிறுநீரக நோய், மனநோய், தைராய்டு போன்ற நோய்களை அலோபதி மருத்துவத்தால் குணப்படுத்த முடியாது என்று கூறி பல ஆண்டுகளாக நோயாளிகள் உட்கொண்டு வந்த மாத்திரைகளை உபயோகிக்க வேண்டாம் என சொன்னதால், பல நோயாளிகள் மருத்துவச் சிக்கலுக்கு ஆளானதும் தெரிய வந்தது.

    குறிப்பாக முதுகு வலியால் அவதியுற்ற ஒரு நோயாளிக்கு, யூடியூப்பில் வீடியோ பார்த்து சிகிச்சை அளித்ததாகவும் கூறப்படுகிறது. கிளினிக் வளர்ச்சியடைய மக்களை கவரும் வகையில் சுவரொட்டி, துண்டு பிரசுரம் கொடுத்து இலவச சுகாதார பரிசோதனை முகாம்களையும்  நடத்தி வந்துள்ளார். இவரை போனில் தொடர்பு கொள்ளும் நோயாளிகளுக்கு கொரியர் சர்வீஸ் மூலமாகவும் மருந்துகளை அனுப்பி வைத்துள்ளார்.

    ALSO READ | வாய்தா பட நடிகை தற்கொலை - காதல் தோல்வியால் நேர்ந்த விபரீதம்!

    சையது சுல்தான் மொஹைதீன் அளிக்கும் சிகிச்சையால் பாதிக்கப்பட்டு அவர் மீது சந்தேகமடைந்த நோயாளிகள் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் லதாவிடம் புகார் கொடுத்ததன் அடிப்படையில் சையது சுல்தான் மொஹைதீனின் கிளினிக்கில் சுகாதார அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    விசாரணையின் முடிவில் சையத் சுல்தான் போலி மருத்துவர் என்றும் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து போலி மருத்துவர் மீது 15 (3) இந்தியன் மெடிக்கல் அசோசியேசன் சட்டம், மற்றும் 419, 420 ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    Published by:Anupriyam K
    First published:

    Tags: Arrest, Crime News, Doctor, Madurai

    அடுத்த செய்தி