மதுரை மாநகர் சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்த விமலன் என்பவர் 25 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் இருந்து பெண் யானை ஒன்றை விலைக்கு வாங்கி வளர்த்து வந்தார்.
இந்நிலையில், அந்த யானைக்கு சுமதி என்று பெயர் வைத்து அரசின் அனுமதியுடன் உத்தங்குடி பகுதியில் ஒரு வீட்டில் வளர்த்து வந்தார். சுமதி யானைக்கு தற்போது 58 வயதாகிறது. இந்த சுமதி யானை நடிகர் சூர்யா நடித்த 7ஆம் அறிவு திரைப்படம், தாஜ்மஹால், நேருக்கு நேர் மற்றும் 'கடைசி விவசாயி' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளது.
சுமதி என்ற வளர்ப்பு யானையை பல்வேறு செயல்களில் ஈடுபடுத்தியதாக புகார் எழுந்தது. எனவே யானையை வெளியே எங்கும் கொண்டு செல்லக்கூடாது என்று வனத்துறையினர் கட்டுப்பாடு விதித்து இருந்தனர்.
இதையும் படிங்க : கிறிஸ்துமஸ் பண்டிகை : கிடுகிடுவென விலை உயர்ந்த மதுரை மல்லி
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பாக சுமதி யானைக்கான உரிமம் புதுப்பித்தலுக்காக வனத்துறைக்கு விண்ணப்பித்துள்ளார். தாமதமான நிலையில் உரிமம் அளிக்க கோரி சுமதி யானை வளர்ப்பவர்களின் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதனையடுத்து வழக்கில் வனத்துறை அளித்த பதிலின் அடிப்படையில் யானையை முறையாக பராமரிப்பதற்கான வசதிகள் இல்லை என கூறி யானையை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டது.
அதனடிப்படையில் மதுரை மாவட்ட வன அதிகாரி குருசாமி டோப்ளா, வனச்சரகர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் வனத்துறையினர் உத்தங்குடி சென்று வளர்ப்பு யானை சுமதியை மீட்டு லாரி மூலமாக திருச்சி எம்.ஆர்.பாளையத்தில் உள்ள யானைகள் பாதுகாப்பு முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.
செய்தியாளர் : யுவதிகா - மதுரை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Madurai