ஹோம் /நியூஸ் /மதுரை /

மதுரையில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் இவைதான்...

மதுரையில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் இவைதான்...

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

மதுரை மாவட்டத்தில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Thirumangalam (Tirumangalam), India

மதுரை மாவட்டத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படும் என்று திருமங்கலம் மின் கோட்ட செயற்பொறியாளர் முத்தரசு தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதிகுட்பட்ட துணை மின் நிலையத்திற்குட்பட்ட மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால் பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கீழ்கண்ட பகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள்:

டீ கல்லுப்பட்டி, ராமுனி நகர், பாலாஜி நகர், கெஞ்சம்பட்டி, காரைக்கோணி, வன்னிவேலம்பட்டி, குன்னத்தூர், கீழங்குளம், தம்பிபட்டி, கொண்டுரெண்டு பட்டி, ஆண்டிப்பட்டி, சின்னரெட்டிபட்டி, ஆவுடையாபுரம், மத்தகரை, பெரியபூலாம்பட்டி, குருவநாயக்கன்பட்டி, கள்ளிக்குடி, எம் புளியங்குளம், குராயூர், சென்னம்பட்டி, சிவரக்கோட்டை, பாரமவுண்ட் மில் , அலுமினிய பவுடர் கம்பெனி, நல்லமநாயக்கன் பட்டி தென்னமநல்லூர், சித்தூர்,ஆவல் , சூரன்பட்டி, திருமால் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர்: யுவதிகா, மதுரை.

First published:

Tags: Local News, Madurai