Home /News /madurai /

மதுரையில் பொதுக்கூட்டம் நடத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அனுமதி

மதுரையில் பொதுக்கூட்டம் நடத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அனுமதி

திருமாவளவன்

திருமாவளவன்

மதுரையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

மதுரை மேலவளவு தியாகிகளின் 25ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வருகிற 30.06.2022 அன்று மதுரை புதூரில்  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

மதுரை அலங்காநல்லூரைச் சேர்ந்த மா.செல்வராசு, உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், மேலவளவு தியாகிகளின் 25ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வருகிற 30.06.2022 அன்று மதுரை கோ.புதூரில்  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வேண்டி மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தேன். பொது கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது.

மதுரை மாநகர் காவல் ஆணையரால் பிறப்பிக்கப்பட்டுள்ள மாநகர் காவல் சட்டம் தடை உத்தரவு அமலில் உள்ள காரணத்தாலும், பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரியுள்ள இடம் நகரின் பிரதான சாலையாக இருப்பதாலும், அத்தியாவாசிய தேவைகளுக்காக பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் அதிகம் வந்து செல்லும் இடமாக உள்ளதாலும், மருத்துவமனைகள் நிறைந்த பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கைக்கும் பொதுப் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படக்கூடும் என்பதால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக வருகின்ற 30.06.2022ம் தேதி புதூரில் பொதுக்கூட்டம் நடத்த காவல்துறை சார்பில் அனுமதி வழங்க இயலாது" என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் 30.06.2022 அன்று மதுரையில் நடைபெற உள்ள  பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன்,  காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

எனவே வருகின்ற 30.06.2022 அன்று மாலை நான்கு மணியிலிருந்து இரவு 10 மணி வரை மதுரை கே.கே.நகர் அம்பிகா திரையரங்கம் அருகிலோ அல்லது சர்வேயர் காலனியிலிருந்து மாட்டுத்தாவணி பேருந்துநிலையம் செல்லும் 70 அடி சாலையின் ஒருபுறத்திலோ அல்லது மதுரை மாநகரில் ஏதாவது ஒரு பொது இடத்திலோ பொது கூட்டம் நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறி உள்ளார்.

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் பேனர் கிழிப்பு..!

இந்த மனு நீதிபதி V. சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி,  இந்த வழக்கின் உத்தரவிற்காக இன்று  ஒத்தி வைத்து உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில் இன்று இந்த வழக்கு நீதிபதி V.சிவஞானம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், மதுரை மேலவளவு தியாகிகளின் 25ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வருகிற 30.06.2022 அன்று மதுரை புதூரில்  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக பொதுக்கூட்டம் நடத்த மதுரை மாநகர காவல் ஆணையர் தரப்பில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது என தெரிவித்து தொடர்புடைய ஆவணத்தை தாக்கல் செய்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கை   முடித்து வைத்து  உத்தரவிட்டார்.
Published by:Karthick S
First published:

Tags: Madurai, Thirumavalavan

அடுத்த செய்தி