மதுரை நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த மன நலம் பாதிக்கப்பட்ட 30 வயது பெண் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு இவரது பெற்றோர் வீட்டில் இல்லாத சமயத்தில், இப்பகுதியைச் சேர்ந்த ஆறு பேர் இந்த பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி இந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இவர்கள் 6 பேரும் தனி தனியாக 6 மாதம் இது போன்று மன நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.
இந்த பெண்ணின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டது. இதை கண்டு பிடித்த பெற்றோர் அரசு மருத்துவமனையில் சென்று பரிசோதனை செய்தனர். அப்பொழுது மனமலம் பாதிக்கப்பட்ட பெண் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து பெண்ணின் பெற்றோர், நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இப்பகுதியைச் சேர்ந்த முருகன், நாக பாண்டி, முனியாண்டி, விக்னேஸ்வரன் , பழனிவேல், சங்கர் உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் மதுரம் இன்று தீர்ப்பு வழங்கினார்.
அதில், குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேரில் வழக்கு விசாரணையின் போது முருகன் என்பவர் இறந்துவிட்டார். எனவே குற்றம் சாட்டப்பட்ட , நாக பாண்டி , முனியாண்டி , விக்னேஸ்வரன் , பழனிவேல், சங்கர் உள்ளிட்ட ஐந்து பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.
Also see...ஆன்லைன் ரம்மி விளையாடி ரூ.5 லட்சம் இழந்த இளைஞர் தற்கொலை
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு குழந்தை பிறந்தது. அந்த குழந்தை ஒரு காப்பகத்தில் வளர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Madurai, Madurai High Court, Sexual harrasment