ஹோம் /நியூஸ் /மதுரை /

வழக்கறிஞரான தூய்மை பணியாளரின் மகள்... பிரமாண்ட வரவேற்பளித்த மதுரை மக்கள்..

வழக்கறிஞரான தூய்மை பணியாளரின் மகள்... பிரமாண்ட வரவேற்பளித்த மதுரை மக்கள்..

வழக்கறிஞரான தூய்மை பணியாளரின் மகள்

வழக்கறிஞரான தூய்மை பணியாளரின் மகள்

Madurai District News : வழக்கறிஞரான தூய்மை பணியாளரின் மகளுக்கு பிரமாண்டமாக மதுரை மக்கள் வரவேற்பளித்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள மேல வாசல் பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன.

இந்த குடியிருப்புகளில் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பணியாற்றக்கூடிய தூய்மை பணியாளர்கள் அதிக அளவு வசித்து வருகின்றனர். மேலும், மதுரையில் உள்ள அனைத்து வார்டுகளிலும் இப்பகுதி மக்கள் தூய்மை பணி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அந்த குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ஆறுமுகம் மற்றும் சுந்தரி. இவர்களது மகள் துர்கா சட்டப்படிப்பு முடித்தார். பின்னர் சென்னையில் உள்ள பார் கவுன்சிலில் பதிவு செய்தார். இதனைத்தொடர்ந்து அவரது சொந்த ஊரான மதுரைக்கு வழக்கறிஞர் உடையில் இன்று காலை சென்னையில் இருந்து மதுரை ரயில் நிலையத்திற்கு வந்தார்.

இதையும் படிங்க : மதுரையில் நாளை(26.12.2022) பல்வேறு இடங்களில் மின்தடை... உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க..

 அப்போது அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் பெண் வழக்கறிஞர் துர்காவிற்கு மாலை அணிவித்து குதிரை மீது அமர வைத்து மேளதாளத்துடன் ஊர்வலமாக ரயில் நிலையத்திலிருந்து மேலவாசல் குடியிருப்பு பகுதிக்கு அழைத்துச் சென்றனர். இதனை கண்டு அங்கிருந்த பொதுமக்கள் நெகிழ்ந்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

செய்தியாளர் : யுவதிகா - மதுரை

First published:

Tags: Local News, Madurai