Home /News /madurai /

நியூஸ் 18 தமிழ்நாடு செய்தியின் எதிரொலியாக மதுரையில் பேருந்துகள் சீரமைப்பு...

நியூஸ் 18 தமிழ்நாடு செய்தியின் எதிரொலியாக மதுரையில் பேருந்துகள் சீரமைப்பு...

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Madurai | நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி எதிரொலியாக, மதுரையில் சேதமடைந்த நிலையில் இயக்கப்பட்டு வந்த அரசு மாநகரப் பேருந்துகள், ஒரே நாளில் சரி செய்யப்பட்டன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India
    மதுரையில் நாள்தோறும் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், அரசு மாநகர பேருந்துகளில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதில், பெரும்பான்மையான பேருந்துகள் சேதமடைந்ததால், பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்வதாக பயணிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். மழை நேரங்களில் பேருந்து மேற்கூரை வழியாக தண்ணீர் கொட்டுவதால் பயணிகள் அவதிக்கு ஆளாகினர்.

    இதுகுறித்து நியூஸ் 18 தமிழ்நாடு, செய்தி வெளியிட்ட மறுநாளே 10-க்கும் மேற்பட்ட பேருந்துகளை சரி செய்து, போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதில், மதுரை விமான நிலையம் - பெரியார் பேருந்து நிலையம் இடையே இயக்கப்படும் 10-A பேருந்தில் உள்ளே இருந்தவாறு டயரை பார்க்க கூடிய சூழல் இருந்தது. அது தற்போது சரி செய்யப்பட்டுள்ளது.



    Also see... ஊதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து சிஐடியு வெளியேறியது...

    இதேபோன்று, வண்டியூர் - நிலையூர் மற்றும் குலமங்கலம், சத்தியமூர்த்தி செல்லும் மாநகர பேருந்துகளின் மேற்கூரையும் சரி செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Bus, Madurai

    அடுத்த செய்தி