Home /News /madurai /

கிரிப்டோ கரன்சியில் பணத்தை இழந்த ஆத்திரத்தில் கல்லூரி மாணவரை கடத்திய இளைஞர்கள் கைது!

கிரிப்டோ கரன்சியில் பணத்தை இழந்த ஆத்திரத்தில் கல்லூரி மாணவரை கடத்திய இளைஞர்கள் கைது!

கடத்தலில் ஈடுபட்ட இளைஞர்கள்

கடத்தலில் ஈடுபட்ட இளைஞர்கள்

மதுரையில் கிரிப்டோ கரன்சியில் பணத்தை இழந்த ஆத்திரத்தில் கல்லூரி மாணவரை கடத்தி சென்ற 3 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India
மதுரை அலங்காநல்லூரை சேர்ந்த அருணன் (25) என்பவர் கடந்த ஆண்டு கோவையில் ஒரு தனியார் கல்லூரியில் படித்து கொண்டிருந்த போது, கிரிப்டோ கரன்சி முதலீடு குறித்து அறிந்து, அதில் முதலீடு செய்துள்ளார். இதனையடுத்து தனது நண்பர்களிடமும் இதை பற்றி தெரிவித்துள்ளார். கிரிப்டோவில் ரூ. 40,000 முதலீடு செய்தால் வாரம் தோறும் ரூ.2000 வட்டி கிடைக்கும் என கூறியுள்ளார்.

அதன் மூலம் அவரும், அவருடைய நண்பர்கள் சிலரும் சேர்ந்து மொத்தமாக சுமார் ரூ. 16 லட்சம் வரை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளனர். பின், அருணன், மேற்படிப்பிற்காக மதுரையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் சேர்ந்தார். இந்நிலையில் அவர்கள் முதலீடு செய்த கிரிப்டோ கரன்சி நிறுவனம் மூடப்பட்டதால் அருணன் மூலமாக முதலீடு செய்த அவரது நண்பர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.

பணத்தை இழப்பதற்கு அருணன் தான் காரணம் எனக்கூறி, அவரிடம் ரூ. 16 லட்சத்தை திருப்பி கொடுக்குமாறு அவரது நண்பர்கள் வற்புறுத்தியுள்ளனர். இந்நிலையில், அவர்கள் நேற்று மதுரை வந்து, அருணனை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் வைத்து கத்தி முனையில் கடத்தி சென்றுள்ளனர்.

இது குறித்து போலீசாருக்கு அளிக்கப்பட்ட தகவலின் மூலம், தல்லாகுளம் காவல்துறையினர் ஓட்டலில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரித்து, அருணனை கடத்தி சென்ற 3 பேர் கொண்ட கும்பலை அழகர்கோயில் சாலையில் வைத்து கைது செய்தனர்.

இதையும் வாசிக்க: “பாஜக அரசின் அநீதிச்செயல்பாடு“ பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் கைதுக்கு சீமான் கண்டனம்

விசாரணையில், அவர்கள் மூவரும் கோவையை சேர்ந்த அரவிந்த் குமார் (23), ரிஷிகுமார் (23), கார்த்திக்கேயன் (24)  என்பது தெரிய வந்தது. அவர்கள் அருணனை கடத்தி சென்று அவரிடம் ரூ. 16 லட்சத்தை கேட்டு மிரட்டியதோடு, அவருடைய அலைபேசியையும் பறித்துள்ளனர். அவர்களுடன் இணைந்து கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாகி உள்ள பிரசன்னா, ஆனந்த் ஆகிய இரண்டு பேரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Published by:Siddharthan Ashokan
First published:

Tags: Crypto currency, Kidnap, Madurai

அடுத்த செய்தி