முகப்பு /செய்தி /மதுரை / பிரிந்துப்போன காதல் மனைவி வெட்டிக்கொலை.. இளைஞர் வெறிச்செயல் - மதுரையில் பகீர் சம்பவம்

பிரிந்துப்போன காதல் மனைவி வெட்டிக்கொலை.. இளைஞர் வெறிச்செயல் - மதுரையில் பகீர் சம்பவம்

இளம்பெண் கொலை காதல்கணவன் கைது

இளம்பெண் கொலை காதல்கணவன் கைது

Madurai News : மதுரையில் பட்டப்பகலில் குடியிருப்பு பகுதியில் இளம்பெண்ணை கொடூரமாக கொலை செய்து தப்பியோடிய காதல் கணவர் கைது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மதுரையில் பட்டப்பகலில் இளம்பெண் ஒருவர் காதல் கணவனால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை தெற்கு வெளிவீதியை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம். இவரது மகள் வர்ஷா (வயது 19). கீரைத்துறை பகுதியை சேர்ந்த பழனி (வயது 28) - வர்ஷா இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவரது காதல் விவகாரம் தெரிந்தநிலையில் வர்ஷா வீட்டில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் வீட்டைவிட்டு வெளியேறி இருவரும் பெற்றோர்கள் சம்மதம் இன்றி திருமணம் செய்துக்கொண்டனர்.

திருமணத்துக்கு பின்னர் இருவரும் ஜெய்ஹிந்த்புரத்தில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். சில நாள்களிலே காதல் திருமணம் கசந்துள்ளது. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பழனியுடன் வாழமுடியாது என முடிவு எடுத்த வர்ஷா தனது பெற்றோர் வீட்டுக்கே திரும்பியுள்ளார்.

காதல் திருமணம் செய்த சில மாதங்களில் பொருளாதார ரீதியிலாக இருவரும் கடும் சிரமத்தை சந்தித்துள்ளனர். அப்போது பொருளாதார தேவைக்காக நகைகளை விற்றும், அடகு வைத்தும் குடும்பம் நடத்தியுள்ளனர். இந்த தகராறில் தான் இருவரும் பிரிந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வர்ஷாவை தன்னுடன் மீண்டும் சேர்ந்து வாழ்வருமாறு பழனி வற்புறுத்தியுள்ளார். பழனியுடன் மீண்டும் இணைந்து வாழ இளம்பெண்ணுக்கு விருப்பம் இல்லை எனத் தெரிகிறது.

Also Read:  நடத்தையில் சந்தேகம்.. கணவனை அரிவாள்மனையால் வெட்டிக்கொன்ற மனைவி.. ராணிப்பேட்டையில் அதிர்ச்சி சம்பவம்

இந்நிலையில் இன்று பிற்பகல் 1.50 மணியளவில் தனது வீட்டின் அருகே உள்ள கடைக்கு வர்ஷா சென்றுள்ளார். அப்போது இருசக்கரவாகனத்தில் ஹெல்மெட் அணிந்துக்கொண்டு வேகமாக வந்த பழனி கண்ணிமைக்கும் நேரத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வர்ஷாவின் கழுத்து முகம் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடியுள்ளார்.

காதல் கணவனின் திடீர் தாக்குதலில் நிலைக்குலைந்த இளம்பெண் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தெற்குவாசல் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு விரைந்த போலீஸார் இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் தலைமறைவான பழனியை தேடி வந்த நிலையில் கீரைத்துறை பகுதியில் வைத்து அவரை கைது செய்தனர்.

First published:

Tags: Crime News, Love breakup, Madurai, Tamil News