ஹோம் /நியூஸ் /மதுரை /

மதுரை அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து.! ஒரு பெண் உட்பட 5 பேர் உடல் கருகி பலி!

மதுரை அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து.! ஒரு பெண் உட்பட 5 பேர் உடல் கருகி பலி!

மாதிரி படம்

மாதிரி படம்

Madrurai Fire Accident | தகவலறிந்த சிந்துபட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பட்டாசு ஆலையில் பற்றிய  தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Madurai, India

  மதுரை அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒரு பெண் உட்பட 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

  மதுரை அடுத்த திருமங்கலம் அருகே அழகு சிறை கிராமம் உள்ளுது. இங்கு தனியார் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  இந்நிலையில், இந்த பட்டாசு ஆலையில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மேலும் இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது.

  இதையும் படிங்க : போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு 3 ஆண்டுகள் சிறை... நீதிமன்றம் தீர்ப்பு...

  தகவலறிந்த சிந்துபட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பட்டாசு ஆலையில் பற்றிய  தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

  இதற்கிடையே தீவிபத்தில் சிக்கிக்கொண்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்னர். அப்போது, இந்த தீவிபத்தில் ஒரு பெண் உட்பட 5 பேர் பலி கருகி பலியானதாக போலீசார் தெரிவித்தனர்.

  இறந்தவர்கள் விபரம்:

  1. அம்மாசி

  2. வல்லரசு - வடக்கம்பட்டி,

  3. கோபி - வடக்கம்பட்டி,

  4. விக்கி - புளியக்கவுண்டன்பட்டி,

  5. பிரேமா - அழகு சிறை,

  Published by:Karthi K
  First published:

  Tags: Fire accident, Madurai