ஹோம் /நியூஸ் /மதுரை /

முட்புதரில் அழுகிய நிலையில் சடலமாக கிடந்த கணினி ஆசிரியர்... மதுரையில் அதிர்ச்சி!

முட்புதரில் அழுகிய நிலையில் சடலமாக கிடந்த கணினி ஆசிரியர்... மதுரையில் அதிர்ச்சி!

சடலமாக மீட்கப்பட்ட கணினி ஆசிரியர்

சடலமாக மீட்கப்பட்ட கணினி ஆசிரியர்

Tirumangalam suicide | சடலத்துக்கு அருகே மதுபாட்டிலும், பூச்சி கொல்லி மருந்துகள் இருந்ததால் தற்கொலை செய்திருக்கலாம் என தகவல்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai | Thirumangalam (Tirumangalam)

திருமங்கலம் அருகே தனியார் கல்லூரியின் பின்புறம் உள்ள முட்புதருக்குள் பேரையூரைச் சேர்ந்த கணினி ஆசிரியர் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் விமான நிலைய சாலையில் சுங்கு ராம்பட்டி அருகே தனியார் கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரியின் பின்புறம் உள்ள முட்புதரில் இருசக்கர வாகனம் ஒன்று 2 நாட்களுக்கு மேலாக இருப்பதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற திருமங்கலம் தாலுகா போலீசார் கேட்பார் என்று கடந்த இருசக்கர வாகனத்தை ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள முட்புதருக்குள் போலீசார் ஆய்வு செய்தபோது உடல் அழுகிய நிலையில் 36 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

மேலும், அவரது சடலத்துக்கு அருகே மதுபாட்டில் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் கிடப்பதை கண்ட போலீசார் தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கினர்.

இதையும் படிங்க | தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்த கள்ளக்காதலன்.. கிரைண்டர் கல்லைப்போட்டு கொலை செய்த மகன்கள்!

சடலத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக சடலத்தை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விசாரணையில், இறந்தவர் திருமங்கலத்தை அடுத்த பேரையூர் குறிஞ்சி நகரை சேர்ந்த பாஸ்கர் என்பதும், சிவகங்கை அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கணினி ஆசிரியராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது.

தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர்: சிவக்குமார், மதுரை.

First published:

Tags: Crime News, Local News, Madurai, Suicide, Teacher