தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் பல்வேறு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை அரசு மேற்கொண்டு வருகிறது.
மதுரை மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 10 க்கும் மேற்பட்டோர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கபடுகின்றனர்.
இந்தநிலையில், கொரோனா பாதிப்பு குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ‘அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கல்வி நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் காய்ச்சல் பரிசோதனை செய்ய வேண்டும். தொடர்ந்து கிருமி நாசினி தெளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என சுகாதரத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.
மேலும், பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். ஆனால், ஆட்சியர் அலுவலகம் மற்றும் பொது இடங்களில் பெரும்பாலானோர் ஆட்சியரின் உத்தரவை கடைபிடிக்காத நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் கடைகள், பொது இடங்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் ஆய்வு மேற்கொண்டதில், முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதித்தும், முகக்கவசம் வழங்கி எச்சரிகை விடுத்து அனுப்பினர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், ‘மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 200 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை.
அ.தி.மு.க உட்கட்சிப் பூசல்: அங்கீகாரக் கடிதம் கிடைக்காமல் சுயேட்சையாகும் அ.தி.மு.க வேட்பாளர்
தடுப்பூசி எடுத்து கொண்டவர்களுக்கு கொரோனா பரவல் குறைவாக வருகிறது. முகக்கவசம், சமூக இடைவெளி இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. மதுரை மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி 81 சதவீதமும், இரண்டாம் தவணை தடுப்பூசி 71 சதவீதமும் செலுத்தப்பட்டு உள்ளது. அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்" என்று தெரிவித்தார்.
உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.