ஹோம் /நியூஸ் /மதுரை /

மதுரை-கோயம்புத்தூர் ரயிலின் பயண நேரம் குறைப்பு... வேகம் அதிகரிப்பு

மதுரை-கோயம்புத்தூர் ரயிலின் பயண நேரம் குறைப்பு... வேகம் அதிகரிப்பு

ரயில்

ரயில்

Madurai District | மதுரை - கோயம்புத்தூர் விரைவு ரயிலின் வேகம் அதிகரிக்கப்படும் என்றும், இதனால் பயண நேரம் குறைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரை-கோயம்புத்தூர் விரைவு ரயில் (16722) தற்போது மதுரைல் இருந்து காலை 07.25 மணிக்கு புறப்பட்டு மதியம் 12:45 மணிக்கு கோயம்புத்தூர் சென்றடைகிறது. இந்த ரயிலின் வேகம் டிசம்பர் 25ஆம் தேதி முதல் அதிகரிக்கப்பட்டு கோயம்புத்தூருக்கு மதியம் 12:15 மணிக்கு சென்று சேருமாறும் வகையில் கால அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. எனவே, பயண நேரம் 30 நிமிடம் குறைகிறது.

இந்த ரயில் ஒட்டன்சத்திரம் (காலை 09:15 மணி), சத்திரப்பட்டி (காலை 09:24), பழனி ( காலை 09:40 ), புஷ்பத்தூர் (காலை 09:53), மடத்துக்குளம் ( காலை 10:01), மைவாடி ரோடு (காலை 10:06), உடுமலைப்பேட்டை (காலை 10:15), கோமங்கலம் (காலை 10:28), பொள்ளாச்சி (காலை 10:53), கிணத்துக்கடவு (காலை 11.05), போத்தனூர் (காலை 11:30) ஆகிய ரயில் நிலையங்ககளை கடந்து சென்று மதியம் 12:15 மணிக்கு கோவையை சென்று சேரும்.

இந்த ரயில் நிலையங்களில் நடப்பிலிருக்கும் கால அட்டவணைப்படி உள்ள புறப்படும் நேரத்திற்கு மேலும் முன்னதாக புறப்படும்படி மாற்றப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மறு மார்க்கத்தில் கோயம்புத்தூர் - மதுரை விரைவு ரயில் (16721) தற்போது கோவையில் இருந்து பிற்பகல் 02:05 மணிக்கு புறப்பட்டு இரவு 07:35 மணிக்கு மதுரையை வந்து சேருகிறது.

Must Read : கொரோனா வைரஸ்... திருச்சி விமான நிலையத்திற்கு வந்த முக்கிய அலர்ட்

ஆனால், 25ஆம் தேதிக்குப் பிறகு இந்த ரயிலானது கோயம்புத்தூரில் இருந்து பிற்பகல் 02:40 மணிக்கு புறப்பட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 35 நிமிட பயண நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ரயிலானது இரவு 07:35 மதுரை வந்து சேரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே வருந்து சேரும் நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை என மதுரை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

First published:

Tags: Local News, Madurai, Southern railway, Train