ஹோம் /நியூஸ் /மதுரை /

அடடே இது புதுசா இருக்கே..! பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களை மடக்கி புத்தாண்டு கொண்டாடிய மதுரை போலீஸ்...

அடடே இது புதுசா இருக்கே..! பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களை மடக்கி புத்தாண்டு கொண்டாடிய மதுரை போலீஸ்...

மதுரை

மதுரை

Madurai Police News Year Celebration : கோரிப்பாளையம் பகுதியில் புத்தாண்டை முன்னிட்டு ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களுடன் மதுரை போலீசார் புத்தாண்டை கொண்டினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரையில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் விதமாக பட்டாசுகள் வெடித்தும், கேக்குகளை வெட்டியும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை கூறியும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், மதுரையில் முதல் முறையாக காவல்துறை சார்பாக மதுரை, கோரிப்பாளையம் பகுதியில் உள்ள தேவர் சிலை அருகே நூற்றுக்கும் ஏற்பட்ட போலீஸ் அதிகாரிகள் மக்களுடன் சேர்ந்து புத்தாண்டை கொண்டாடுவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

அதன்படி சுமார் 12 மணி அளவில் காவல்துறை உயர் அதிகாரிகள் தலைமையில் புத்தாண்டை கொண்டாட்டம் நடைபெறுவதாக இருந்தது. கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் விதமாக மக்கள் பல பேர் கூடி இருந்தனர்.

புத்தாண்டு கொண்டாடிய மதுரை போலீஸ்

இதையும் படிங்க : புத்தாண்டை முன்னிட்டு மதுரை மல்லி ரூ.1800க்கு விற்பனை..

இதற்கிடையில், புத்தாண்டை முன்னிட்டு இளைஞர்கள் பைக் ரைஸ் போன்ற செயலில் ஈடுபடக்கூடாது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கோரிப்பாளையம் பகுதியில் இளைஞர்கள் சிலர் பைக் ரேஸில் ஈடுபட்டனர். அவர்களை அங்குள்ள காவல்துறையினர் மடக்கி பிடித்து புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அறிவுரை கூறினர்.

அதன்பேரில் காவல்துறையின் உயர் அதிகாரியான வனிதா தலைமையில் சுமார் 12 மணியளவில் பொதுமக்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் காவல் துறையுடன் இணைந்து கேக் வெட்டி மகிழ்வித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பின்பு உயர் அதிகாரியான செந்தில்குமார் அங்குள்ள பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறினார். பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களை பிடித்து காவல்துறை சார்பாக நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடச் செய்தது அங்குள்ள மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

செய்தியாளர் : யுவதிகா - மதுரை

First published:

Tags: Local News, Madurai