முகப்பு /செய்தி /மதுரை / மதுரை சித்திரைப் பெருவிழா.. மே.5ல் ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்..!

மதுரை சித்திரைப் பெருவிழா.. மே.5ல் ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்..!

மதுரை சித்திரை திருவிழா

மதுரை சித்திரை திருவிழா

Madurai Chithirai Thiruvizha : இந்தாண்டு ஏப்ரல் 23ம் தேதியன்று மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் சித்திரை பெருவிழா துவங்கவுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மதுரை சித்திரைப்பெருவிழா ஏப்ரல்.23 முதல் மே.8-ம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், மே.5 அன்று கள்ளழகர் வைகையாற்றில் இறங்குகிறார்.

மதுரையில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் கள்ளழகர் கோயில் விழாக்களை உள்ளடக்கி 16 நாட்கள் சித்திரைப் பெருவிழா கொண்டாட்டம் நடைபெறும். இந்தாண்டு ஏப்ரல் 23ம் தேதியன்று மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் விழா துவங்கவுள்ளது.

பின்னர், தினமும் பல்வேறு வாகனங்களில் மாசி வீதிகளில் மீனாட்சி-சுந்தரேசுவரர் வீதியுலாக்கள் நடைபெறும். அதன் தொடர்ச்சியாக, ஏப்ரல் 30-ல் மீனாட்சியம்மன் பட்டாபிஷேகமும், மே 1-ல் திக் விஜயமும், மே 2-ல் திருக்கல்யாணமும், மே 3-ல் தேரோட்டமும் நடைபெறவுள்ளதாக கோயில் நிர்வாகம் இணையத்தில் அறிவித்துள்ளது.

கள்ளழகர் கோயில் விழாக்களில் முக்கியத்துவம் பெற்ற, கள்ளழகர் எதிர்சேவை மே 4 அன்றும், சிகர நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கும் விழா மே 5 அன்றும், பூ பல்லக்கு மே 7 அன்றும் நடைபெறவுள்ளன.

First published:

Tags: Local News, Madurai, Tamil News