முகப்பு /செய்தி /Madurai / மதுரை மத்திய சிறையில் பணியாற்றிவரும் சிறைக்காவலர் டிஸ்மிஸ்... அதிகமாக விடுப்பு எடுத்ததால் பணி நீக்கம் செய்து அதிரடி உத்தரவு...

மதுரை மத்திய சிறையில் பணியாற்றிவரும் சிறைக்காவலர் டிஸ்மிஸ்... அதிகமாக விடுப்பு எடுத்ததால் பணி நீக்கம் செய்து அதிரடி உத்தரவு...

மதுரை மத்திய சிறை

மதுரை மத்திய சிறை

Madurai Disrict : மதுரை மத்திய சிறையில் பணியாற்றும் சிறைக்காவலர் அதிகமாக விடுப்பு எடுத்ததால் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

  • Last Updated :

கடந்த 2011-ம் ஆண்டு சிறைத்துறையில் பணி நியமனம் செய்யப்பட்டு கொடைக்கானல் கிளைச்சிறையில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வரும் ஆனந்த என்பவர் மாற்று பணியாக மதுரை மத்திய சிறையில் பணியாற்றி வருகிறார். இவர் அடிக்கடி தன்னிச்சையாக செயல்பட்டு உரிய அறிவிப்பின்றி விடுப்பு எடுத்துக் கொண்டதாகவும், அது குறித்து எந்தவித விளக்கமும் அதிகாரிகளிடத்தில் தெரிவிக்காமலும் இருந்து வந்துள்ளார்.

இதனையடுத்து அவர் மீது எழுந்த புகாரை  தொடர்ந்து சிறைத்துறை நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு இரண்டாம் நிலைக் காவலர் ஆனந்ததை பணி நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Also see... ஜேசிபி மூலம் மாயாறு ஆற்று பாலத்தை கடக்கும் உதகை மக்கள்..

top videos

    இதுபோன்று அடிக்கடி தன்னிச்சையாக விடுப்பு எடுப்பது,  ஒழுங்கீனமாக நடந்து கொள்வோர்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைத்துறை நிர்வாகம் எச்சரித்துள்ளது.

    First published:

    Tags: Madurai Central Jail, Madurai Central Prison