Home /News /madurai /

Madurai | காவலர்களுக்கு ஏற்படும் தாமதத்தைக் குறைக்க மதுரை மத்திய சிறையில் புதிதாக டோக்கன் வசதி அறிமுகம்

Madurai | காவலர்களுக்கு ஏற்படும் தாமதத்தைக் குறைக்க மதுரை மத்திய சிறையில் புதிதாக டோக்கன் வசதி அறிமுகம்

மதுரை சிறைச்சாலை

மதுரை சிறைச்சாலை

Madurai | மதுரை மத்திய சிறையில் போலீசார் காத்திருப்பதை தவிர்க்க புதிதாக டோக்கன் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தின் முக்கிய சிறைகளில் ஒன்றான மதுரை மத்திய சிறையில் தினமும் குறைந்தது 20 பேராவது விசாரணை கைதிகளாக அடைக்கப்படுகின்றனர். அதே சமயம் நீதிமன்ற விசாரணைக்காக நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் அழைத்து செல்லப்படுகின்றனர்.

விசாரணை முடிந்து மீண்டும் சிறைக்கு அழைத்து வந்து கைதிகளை விட்டுச்செல்ல போலீசாருக்கு வெகுநேரம் ஆகிவிடுகிறது. ஒரு கைதியை சிறைக்குள் அனுமதிக்க போலீசாருக்கு குறைந்தது ஒரு மணி நேரம் ஆகிறது. இவ்வாறு ஒவ்வொரு கைதியயும் உள்ளே அனுமதிக்க பல மணி நேரம் தேவைப்படுகிறது. அதுவரை போலீசார் காத்திருக்கும் நிலை உள்ளது. இதுவே போலீசாரின் மன உளைச்சலுக்கு பெரிதும் காரணமாக அமைகிறது.

எனவே இதை தவிர்ப்பதற்காக டோக்கன் வசதியை அறிமுகப்படுத்த மதுரை மத்திய சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி போலீசார் வந்ததும் அவர்களுக்கு வரிசைப்படி டோக்கன் எண் வழங்கப்படும்.

அதன் அடிப்படையில் கைதிகளை அழைத்துச்செல்ல அனுமதிக்கப்படுவர். மேலும் கைதிகள், போலீசார் காத்திருப்பை தவிர்க்க மாலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை உதவி ஜெய்லர் ஒருவரை சிறை நிர்வாகம் நியமித்துள்ளது. இவர் கைதிகளை உடனுக்குடன் பரிசோதித்து ஆவணங்களை ஆய்வு செய்து கைதிகளை சிறைக்குள் அனுப்புவார்.

இதுகுறித்து ஆயுதப்படை காவலர் ஒருவரிடம் கேட்டபொழுது காலை நீதிமன்றம் இயங்க ஆரம்பிக்கும் நேரத்திற்கு முன்பு கைதிகளை அங்கு அழைத்துச்செல்வது முதல் இரவு 09 முதல் 10 மணி வரை பணி செய்வதாகவும் கைதிகளை சிறைக்குள் அனுப்பும் வரை ஓய்வு கிடைப்பதில்லை என்றும், இந்த டோக்கன் முறை இனி பெரிதும் சிறை காவலர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையே உடல்நலம் பாதித்த கைதிகளை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சை முடியும் வரை பாதுகாக்க ஆயுதப்படை முன்வராததால் சமந்தப்பட்ட ஸ்டேஷன் போலீசாரையே வரவழைத்து அவர்களுடன் சிறை நிர்வாகம் கைதிகளை அனுப்புகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Madurai

அடுத்த செய்தி