ஹோம் /நியூஸ் /மதுரை /

மதுரை மத்திய சிறையில் ரூ.100 கோடி ஊழல்.. 12 அலுவலர்கள் அதிரடி பணியிடமாற்றம்..!

மதுரை மத்திய சிறையில் ரூ.100 கோடி ஊழல்.. 12 அலுவலர்கள் அதிரடி பணியிடமாற்றம்..!

மதுரை மத்திய சிறை

மதுரை மத்திய சிறை

மதுரை மத்திய சிறையில் 100 கோடி ரூபாய் ஊழல் புகார் குறித்த விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இங்கு பணியாற்றிய 12 அலுவலர்கள் பணியிடமாற்றம்  செய்யப்பட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரை மத்திய சிறையில் 100 கோடி ரூபாய் ஊழல் புகார் குறித்த விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அங்கு பணியாற்றிய 12 அலுவலர்கள் பணியிடமாற்றம்  செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என மொத்தம் 1,850 கைதிகள் உள்ளனர். இங்குள்ள கைதிகளுக்கு மருத்துவ பேண்டேஜ், ஆபீஸ் கவர், பேக்கரி பொருட்கள் உள்ளிட்ட தயாரிப்பு தொழில்கள் கற்றுத்தரப்படுகின்றன. அதன் மூலம் சிறை நிர்வாகத்துக்கு வருவாயும், கைதிகளுக்கு வருமானமும் கிடைத்து வருகிறது.

இந்த பொருட்களை வெளிச்சந்தையில் விற்பனை செய்ததில் சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்றதாக எழுந்த புகாரை தொடர்ந்து, அது சார்ந்த விசாரணையும், தணிக்கை ஆய்வும் நடத்தப்பட்டன. இந்த புகாரில் தொடர்புடைய பணியாளர்கள் சிலர் தொடர்ந்து இங்கு பணிபுரிவது தெரிய வந்தது.

Read More : தமிழகத்தில் ஒரு அந்நிய சக்தி... அமைச்சர் பிடிஆர் விமர்சனத்திற்கு அண்ணாமலை பதிலடி

அண்மையில் மதுரை சிறையில் ஆய்வு நடத்திய சிறைத்துறை டிஜிபி அமரேஷ் பூஜாரி இது குறித்தும் விசாரணை நடத்தியிருந்தார். இந்த சூழலில், இங்கு பணியாற்றிய 12 அலுவலர்கள் தமிழகத்தின் பல்வேறு சிறைகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சிறை அலுவலக கண்காணிப்பாளர் மகேஸ்வரி, மேலாளர் சித்திரவேல் ஆகியோர் சென்னை புழல் சிறைக்கும், காவலர் காளிமுத்து ராமநாதபுரம் சிறைக்கும், பேக்கிங் கிளர்க் கதிரவன் புதுக்கோட்டை சிறைக்கும், உதவியாளர் முத்துலெட்சுமி சேலம் சிறைக்கும் பணியிட மாற்றம் செய்து டிஜிபி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

First published:

Tags: Madurai, Madurai High Court