முகப்பு /செய்தி /மதுரை / மதுரை மிட்டாய் கடையில் ரூ.1.94 லட்சம் கொள்ளை அடித்த நபர்களுக்கு காவல்துறை வலைவீச்சு

மதுரை மிட்டாய் கடையில் ரூ.1.94 லட்சம் கொள்ளை அடித்த நபர்களுக்கு காவல்துறை வலைவீச்சு

மதுரை கிழக்கு மாசி வீதி

மதுரை கிழக்கு மாசி வீதி

Madurai Candy Shop Theft | காலையில் வழக்கம்போல் கடையை திறக்கும்போது கடையின் இருந்த பணம் திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மதுரையில் மிட்டாய் கடையில் 1 லட்சத்து 94 ஆயிரம் ரூபாயை திருடிச்சென்ற மர்ம நபர்களை காவல்துறை தேடி வருகின்றனர்.

மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்த காமாட்சி பாண்டியன், கிழக்கு மாசி வீதி பகுதியில் எஸ்.எஸ்.டிரேடர்ஸ் என்ற பெயரில் நவதானியம், மிட்டாய் கடையை  நடத்தி வருகிறார். நேற்று இரவு பணிகளை முடித்துவிட்டு வழக்கம் போல கடையை அடைத்து விட்டு சென்றுள்ளார்.  நள்ளிரவு நேரத்தில் மிட்டாய் கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் கடையின் பணப்பெட்டியில் வைக்கப்பட்டு இருந்த 1 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச்சென்றுள்ளனர்.

இன்று காலையில் கடையை திறந்து பார்த்த போது பணம் திருடுபோனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.பின்னர் கடையின் உரிமையாளர் விளக்குத்தூண் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர்: வெற்றி

First published:

Tags: Crime News, Local News, Madurai