ஹோம் /நியூஸ் /மதுரை /

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பெயரில் பிழை.. மாற்றக்கோரி நீதிமன்றத்தில் மனு

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பெயரில் பிழை.. மாற்றக்கோரி நீதிமன்றத்தில் மனு

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்" (Manonmaniam Sundharanar University) என்று எழுத்துப் பிழையுடன் உள்ள பெயரை "மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்" (Manonmaneeyam Sundharanaar University) என சரி செய்து மாற்றி வைக்க கோரிய பொது நல மனு தாக்கல்

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai | Tirunelveli

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பெயர் பிழையாக எழுதப்படுகிறது என்றும் இதனை மாற்ற வேண்டும் என்றும் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

திருப்பூரை சேர்ந்த முத்து சுப்பிரமணியன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் தாக்கல் செய்த பொது நல மனுவில்

ஆசிரியர் பி.சுந்தரம் பிள்ளை அவர்கள் மனோன்மணீயம் என்ற நாடகம் மற்றும் நமது தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை இயற்றியவர்.

இவரின் நினைவாக "மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்" (Manonmaniam Sundharanar University) 1990-ல் உருவாக்கப்பட்டது.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் என்ற பெயரில் பிழை உள்ளது.  மணோன்மணியம் என்ற பெயரி "ணி" குறிலாக உள்ளது. "ணீ" நெடிலாக மாற்ற வேண்டும். அனைத்து அரசு புத்தகத்திலும் மற்றும் பி.சுந்தரம் பிள்ளை இயற்றிய நாடகத்தின் பெயரும் மனோன்மணீயம் (Manonmaneeyam) என்று உள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழகத்திற்கு பலமுறை மனு அளித்தும் எனது மனு மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, "மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்"(Manonmaniam Sundharanar University) என்று எழுத்துப் பிழையுடன் உள்ள பெயரை "மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்"(Manonmaneeyam Sundharanaar University) என சரி செய்து மாற்றி வைக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

Also see... ஆம்னி பேருந்து கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும்:

இந்த மனு நீதிபதிகள் R.மகாதேவன், J.சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தமிழக உயர்கல்வித்துறை செயலாளர், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஆகியோர் மனுதாரரின் மனுவை 6 வாரத்திற்குள் பரிசீலினை செய்து சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தனர்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Madurai, Manonmaniam Sundaranar University, Tirunelveli, University